Don't Miss!
- News
"முக்கோண இடி".. வீசும் எடப்பாடி புயல்.. சுழட்டியடிக்கும் சூறாவளி திமுக.. பாஜக டோட்டலா சேஞ்ச் ஆகுதே?
- Sports
பிரியாணி கிடைக்கலனா ஹோட்டலுக்கே போக மாட்டீங்களா? செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான வாசிங்டன் சுந்தர்
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
விக்ரமனுக்கு அறிவு இருந்தா...எதிரியை மாத்திக்கணும்..சரியான பதிலடி கொடுத்த வனிதா!
சென்னை : விக்ரமனுக்கு அறிவு இருந்தா எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனை வெளுத்துள்ளார் நடிகை வனிதா.
பிக் பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் விக்ரமன். இவர் எப்போதுமே நீதிடா...நேர்மைடா, நியாயம்டா என பேசி வருவார்.
இது சக போட்டியாளருக்கு எரிச்சலாக இருப்பதால், அனைவரும் வாரம் தவறாமல் விக்ரமனை நாமினேட் செய்து வருகின்றனர்.
அம்பு
ஜனனியின்
தப்பாட்டம்..விக்ரமனுக்கு
எதிராக
மொழி
பிரச்சனையை
தூண்டி
அசிங்கப்பட்ட
அசீம்,
அமுதவாணன்

தானாக ஆஜரான விக்ரமன்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ரேங்க் டாஸ்கின் போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று பேசியதால் கடுப்பான விக்ரமன், தானாக ஆஜராகி இப்படி பேசுவது சரியில்லை என்றும் , பெண்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று வியாக்காணம் பேசினார். இதனால், டென்ஷன் ஆன ஆசீம், இந்த அரசியல் பேச்சை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று விக்ரமனை வாடா... போடா என்று ஏக வசனத்தில் பேசினார்.

அசீமுக்கு வார்னிங்
அசீம் பேசியது பேரும் சர்ச்சையான நிலையில் கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அசீமுக்கு கடுமையான வார்னிங் கொடுத்தார்.மேலும், அசீம் ஒருமையில் பேசிய போதும், கண்ணியத்தோடு நடந்து கொண்ட விக்ரமனை கமல் வெகுவாக பாராட்டி, இப்படித்தான் ஒரு அரசியல்வாதி இருக்க வேண்டும் என்றார்.

அசீமிடம் சண்டை
இதையடுத்து, எதற்கு எடுத்தாலும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்து கொண்டு வருகிறது. பொம்மை டாஸ்கில் தனலட்சுமியை அசீம் தள்ளிவிட்டபோதும், சம்மனே இல்லாமல் விக்ரமன் ஆஜராகி அசீமிடம் சண்டை போட்டார்.

அடிதடி சண்டை
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கின் போது அமுதவாணனும் அசீமும் அடிச்சி விளையாடலாமா என்றும், வா வந்து என்னை அடி என்று சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது அசீம், அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து, தலையை திருப்பி என்னை அடி என்றார். அப்போது அமுதவாணன் என்னை அசீம் அடித்துவிட்டார் என் கூப்பாடு போட்டார்.

மோசமாக விளையாடினார்
இதையடுத்து, ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நேற்று முடிந்த நிலையில், இந்த டாஸ்கில் அசீம் மோசமாக விளையாடினார் என்றும், டாஸ்கின் போது ஒருவர் மீது கை வைப்பது சரியில்லை என்றும், இது தவறு என்று தெரிந்தும் அசீம் வாரா வாரம் லைம் லைட்டுக்காக இதை செய்து வருகிறார் என்றார்.

அசீம் simply waste
அதன் பின் பேசிய அசீம், நான் லைம் லைட்டுக்காக விளையாடவில்லை, நீங்கள்தான் நான் ஸ்டாரங்கான பிளேயர் என்று தெரிந்து கொண்டு என்னை வைத்தே விளையாடுகிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி அசிங்கப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, அசீம் மற்றும் மைனா மோசமாக விளையாடியதற்காக simply waste என்ற போர்ட் கழுத்தில் மாட்டப்பட்டது.

அறிவு இருந்தா?
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் ரிவ்யூ கொடுத்து வரும் வனிதா, விக்ரமனின் சில செயல் எனக்கு பிடிக்கவே இல்லை. உனக்கு அறிவு இருந்தா அசீமை ஒவர் டேக் பண்ணு இல்லையா? நீ உன்னுடைய எதிரியை மாத்திக்கோ அசீமை கண்டுக்காத. அதைவிட்டு விட்டு அசீமை குறை சொல்லுவது நல்லது இல்லை. அசீம் ஸ்டாராங்கான ஆளு அவன் கூட உன்னால போட்டி போட முடியல. இதனால், அசீம் பற்றி பின்னால் பேசிக்கொண்டே இருந்தால் ஜெயிக்க முடியாது. விக்ரமன் இந்த ஸ்டேட்டர்ஜியை மாற்றிக்கொளள் வேண்டும் என்றார் வனிதா.