Wildcard என்ட்ரி எப்போது....மெளனம் காக்கும் பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்பட்டு 21 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 22 ம் நாளான இன்று, வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நமிதா மாரித்து வெளியேறினார்.

இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்ட இந்த சீசனின் முதல் எலிமினேஷனில் நாடியா சாங்கும், மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்ட எலிமினேஷனில் அபிஷேக் ராஜாவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

Wildcard என்ட்ரி யார்

Wildcard என்ட்ரி யார்

இதனால் Wildcard என்ட்ரி எப்போது, எந்த பிரபலம் அடுத்தபடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது பற்றி விஜய் டிவி தரப்பிலோ அல்லது பிக்பாஸ் டீம் தரப்பிலோ எந்த உறுதியான, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

மீண்டும் நமீதாவா

மீண்டும் நமீதாவா

இருந்தாலும் பிக்பாஸ் 5 துவங்கிய சிறிது நாட்களிலேயே, போட்டியில் 15வது அல்லது 17வது நாளில் Wildcard என்ட்ரி நடைபெறும் என்று தகவல் பரவியது. அதோடு வைல்ட்கார்டு என்ட்ரியாக நடிகை ஷாலு ஷம்மு வர போகிறார் எனவும் கூறப்பட்டது. அதே சமயம் மற்றொரு தகவலாக வைல்ட்கார்டு என்ட்ரியாக நமிதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர போவதாகவும் கூறப்பட்டது.

மிலா வர போகிறாரா

மிலா வர போகிறாரா

நமிதா மாரிமுத்து அல்லது பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பட்டியல் என வெளியான அத்தனை பட்டியல்களிலும் இடம்பெற்ற நடிகை ஷகீலாவின் மகள் மிலா வைல்ட்கார்டு என்ட்ரியில் வர போகிறார் என தகவல் பரவியது. நமிதா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சமயத்திலேயே அவருக்கு பதில் மிலா பிக்பாஸ் வீட்டிற்குள் வர போவதாக கூறப்பட்டது.

நமிதா வர வாய்ப்பில்லை

நமிதா வர வாய்ப்பில்லை

அதோடு, நமிதா இன்னும் பிக்பாஸ் செட்டில் தான் இருக்கிறார். விரைவில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் வெளியான சிறிது நாட்களிலேயே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற பிறகு நமிதா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ வெளியானது. அதனால் பிக்பாஸ் விதிகளின் படி நமிதா மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை .

மெளனம் காக்கும் பிக்பாஸ்

மெளனம் காக்கும் பிக்பாஸ்

அவருக்கு பதில் மிலா வருவதாக கூறப்பட்டதும் இதுவரை நடக்கவில்லை. நிகழ்ச்சி துவங்கி 22 நாட்கள் ஆகி விட்டது. இருந்தாலும் வைல்ட்கார்டு என்ட்ரியோ, அது பற்றிய தகவலோ வெளியிடப்படவில்லை. இதனால் வைல்ட்கார்டு என்ட்ரி எப்போது நடைபெற உள்ளது, எந்த பிரபலம் வர போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X