தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் ரியாலிட்டி ஷோ தான் என்றும் ரியாலிட்டி கிடையாது என சொன்னாலும், ரசிகர்கள் அதுகுறித்த தெளிவு இல்லாமல் இருப்பது தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அசீமுக்கு டைட்டில் தந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஒரு வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பேசு பொருளாக உள்ளது. ஆரி இப்போ என்ன செய்யுறாரு, ஆரவ் என்ன பண்றாரு, ரித்விகா என்ன ஆனங்க என்பதெல்லாம் ரசிகர்கள் கண்டுக்கவே மாட்டாங்க, என்பது காலத்தின் கட்டாயம்.
அடுத்த சீசன் வந்து விட்டால் அசீமையே ரசிகர்கள் மறந்து விட்டு அப்போ யாரு பிக் பாஸ் வீட்டில் அராஜகம் செய்கின்றனர் என்றும் ரசிகர்களின் மனதை யார் கவர்கிறார் என்பதையும் பற்றி பேச போயிடுவாங்க.. இந்நிலையில், பேட்டிகளில் விக்ரமன் குறித்தும் தனா குறித்தும் அசீம் அளித்த பேட்டி வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

ரெட் கார்டு கொடுக்கணும்
அசீம் தனலட்சுமியை நெஞ்சை பிடித்து தள்ளி விட்டதாக டேய்.. எங்க கை வச்சி எப்படி தள்ளி விட்ட என தனலட்சுமி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணதை பார்த்த ரசிகர்கள் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கொந்தளித்தனர். அந்த ஹாஷ்டேக்கும் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. ஆனால், அதெல்லாம் செம செட்டப் நடிப்பு என்பது தெரிந்த நிலையில், அசீமுக்கு ரெட் கார்டு எல்லாம் கொடுக்காமல் டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுத்து 50 லட்சம் மற்றும் சொகுசு கார் பரிசும் கொடுத்து பெருமைப்படுத்தினர்.

செல்லக்குட்டி தனா
இந்நிலையில், தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு பேட்டி மூலம் பதில் அளித்து குற்றத்தையும் தப்பான பேச்சுக்களையும் துடைக்க அசீம் ரொம்பவே அயராது பாடுபட்டு வருகிறார். வெற்றியை கொண்டாட முடியாமல் ஒவ்வொருத்தருக்கும் நான் தப்பானவன் இல்லை என்பதை சொல்லி வரும் அசீம் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் தனாவுக்கு போன் போட்டு செல்லக்குட்டி என்ன பண்றீங்க என கேட்க ஆரம்பித்து, அந்த விஷயத்தை பற்றியும் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

தப்பா தொட்டேனா
ஹாய் செல்லக்குட்டி தனா என்ன பண்றீங்க.. நம்ம ரெண்டு பேர் பத்தி தப்பா ஒரு விஷயம் போயிட்டு இருக்கு.. அண்ணன் உன்னை ஏதாவது தப்பான இன்டென்ஷன்ல மீன் பண்ணி தள்ளி விட்டேனா செல்லம்ன்னு கொஞ்ச, அதற்கு தனா கொடுத்துள்ள பதில் தான் அத்தனை நாள் தனாவுக்காக கம்பு சுத்திய ரசிகர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.

அந்தர் பல்டி அடித்த தனா
அது சும்மா நாம பொம்மை டாஸ்க் விளையாடும் போது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தள்ளி விட்டு விளையாடினோமே, அதைத்தான் சொல்றாங்களா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க எனக்கு எப்போவுமே என் அண்ணா தான் என அசீம் தன்னை அப்யூஸ் பண்ணலன்னு தனாவே சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார்.

விக்ரமனை பூமர்னு சொல்லாதீங்க
அதே போல அந்த பேட்டியில் பேசிய அசீம் நண்பர் விக்ரமனை பூமர்னு சொல்லாதீங்க அது ரொம்ப தப்பு. ஷோவில் நான் அவருக்கு பூமர்னு கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, ஆனால் ரசிகர்களாகிய நீங்க அவரை பூமர் என்றோ என்னை கிளவும் என்றோ சொல்வது நல்லா இல்லை என்று விக்ரமன் குறித்தும் பேசியிருந்தார். விக்ரமனுக்கும் நிகழ்ச்சியில் இருந்து போன் போட்ட அசீம் ரிங் போயும் விக்ரமன் எடுக்காத நிலையில், நண்பர் ரொம்ப பிசியாக இருப்பார் என பேசி சமாளித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











