விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி 67ல் இணையும் பிக்பாஸ் பிரபலங்கள்… விஜய்யின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர் தான்

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

தற்காலிகமாக தளபதி 67 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் சில கமிட் ஆகியுள்ளனர்.

விரைவில் தளபதி 67 அப்டேட்

விரைவில் தளபதி 67 அப்டேட்

விஜய்யின் வாரிசு பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகிறது. வாரிசு படத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் சூப்பரான அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் தளபதி 67 படம் குறித்த புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில், விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம் படத்தை லோகேஷ் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கியதால், தளபதி 67 படமும் சம்பவம் செய்யும் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் பிரபலங்கள்

விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பலரும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நடித்திருந்தார். அதேபோல், அதில் நடித்த மகேஸ்வரி, மைனா நந்தினி இருவரும் பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தளபதி 67ல் இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருமே முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

விஜய்யின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

தளபதி 67ல் நடிக்கவுள்ள பிக் பாஸ் பிரபலங்கள் சீசன் 5ல் டைட்டில் வின்னரான ராஜூவும், இப்போது 6வது சீசனில் போட்டியிடும் மைனா நந்தினியும் தான் என தெரியவந்துள்ளது. இதில், ராஜூ தற்போது விஜய் டிவியில் 'ராஜு வீட்டுல பார்ட்டி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், தளபதி 67ல் நடிக்க விஜய்யின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பிக் பாஸ் ராஜூ உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மைனா நந்தினியும் தளபதி 67ல் நடிக்க விஜய் ஓக்கே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மல்டி ஸ்டார்ஸ் படம் தான்

மல்டி ஸ்டார்ஸ் படம் தான்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என பெரிய படையே காத்திருக்கிறது. அதேபோல், நாயகிகள் லிஸ்டில் திரிஷா, சமந்தா இருவரும் உள்ளனர். இவர்கள் தவிர பிக் பாஸ் பிரபலங்கள், மலையாள இளம் நடிகரான மேத்யூ தாமஸ் உள்ளிட்ட மேலும் பலரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விக்ரம் படத்தை போலவே தளபதி 67ம் மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக இருக்கும் எனவும், இது லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X