கல்யாணம் எப்போ...பாலா கேள்விக்கு சிம்பு சொன்ன பதிலை பாருங்க
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் முதல் நாள் ஷோ முடித்து விட்டு கிளம்ப போகும் சமயத்தில், யாரும் எதிர்பாராத விதமாக கல்யாணம் எப்போ என கேட்டு ஷாக் கொடுத்தார் பாலா. அதற்கு சிம்பு சொன்ன பதிலை கேட்டு, அனைவரும் கைதட்டி ரசித்தனர்.
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இன்று முதல் கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். முதல் நாளிலேயே போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்து விட்டார் சிம்பு. போட்டியாளர்கள் அனைவரும் சிம்பு தான் புதிய ஹோஸ்ட் என ஏற்கனவே யூகித்து வைத்திருந்ததாக கூறினர். போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேசி, அனைவரையும் ஜாலி மூடிற்கு மாற்றினார் சிம்பு.

இரண்டு வைல்கார்டு என்ட்ரி
கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற இசை மற்றும் நடனத்துடன் சிம்புவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடைக்கு வந்ததுமே ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார் சிம்பு. இந்த வாரம் டிரெண்டிங் பிளேயர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இரண்டு வைல்கார்டு என்ட்ரிகளாக கலக்க போவது யாரு சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

இந்த வாரம் நோ எவிக்ஷன்
இன்று சிம்பு வந்ததை முன்னிட்டு இந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் ஷாரிக் மற்றும் அபினய் அனுப்பப்பட்டதை போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷனுக்கு தான் பிக்பாஸ் முடிவு செய்திருந்தாராம். ஆனால் சிம்பு வந்து பேசிய பிறகு அது சிங்கிள் எவிக்ஷனாக மாற்றப்பட்டதாம். பிறகு சிம்பு வந்த முதல் நாளே கஷ்டமான விஷயத்தை அறிவிக்க வேண்டாம் என நினைத்த பிக்பாஸ், இந்த வாரம் எவிக்ஷன் வேண்டாம் என முடிவு செய்து விட்டார்களாம்.

லவ் பண்ணலாமா, வேணாமா
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ரசிகை ஒருவர் லவ் பண்ணலாமா, வேண்டாமா என கேட்டு அதிர வைத்தார். அவருக்கு, லவ் பண்றது பெரிய விஷயம் இல்ல. ஆனால் யாரை லவ் பண்ணுகிறோம் என்பது ரொம்ப முக்கியம். நான் எப்போது எனது ரசிகர்களை லவ் பண்றேன் என சொல்லி சமாளித்தார் சிம்பு. இருந்தாலும் அந்த பெண் விடாமல், நீங்க இரக்க வரை நாங்க உங்களை தான் லவ் பண்ணுவோம் என்றார்.

கல்யாணம் எப்போ...சிம்பு சொன்ன பதில்
ஆரம்பத்தில் தான் அப்படி என்றால், ஷோ முடிந்து கிளம்புகிறேன் என்ற சிம்புவிடம் பாலா, ஒரே ஒரு கேள்வி என்றார். கல்யாணம் எப்போ என சிம்புவை பார்த்து கேட்டார் பாலா. இந்த கேள்வியை எதிர்பார்க்காத சிம்பு, ஏன் நான் சந்தோஷமாக, ஜாலியாக, நிம்மதியாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா என பதில் கேள்வி கேட்டார். தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி போன்றவர்கள் சும்மா தைரியமாக பண்ணிக் கொள்ளுங்கள். ஒன்றும் ஆகாது என்றனர். இதுவரை தனது கல்யாணம் எப்போது என யாரிடமும் சொல்லாமல் இருந்த சிம்புவிடம் இன்று பாலா ஓப்பனாக கேட்டதும், அதற்கு சிம்பு சொன்ன பதிலும் கைதட்டல்களை பெற்றது.


Click it and Unblock the Notifications











