Don't Miss!
- Lifestyle
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
- News
பல கோடி வரி.. ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Ultimate Finale..வீட்டிற்குள் வந்து குத்தாட்டம் போட்ட சிம்பு..தாமரை சொன்ன 'நச்சு' பதில்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று, ஆட்டம் பாட்டம் என வீடே களைகட்டி உள்ளது. இறுதியாக இருக்கும் நான்கு பேரில் யார் டைட்டிலை வெல்ல போகிறார் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. 75 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய பிறகு, வார இறுதி எபிசோட்களை சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். 14 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்டுகார்டு என்ட்ரியாக பங்கேற்றனர்.
எப்படியாவது பணத்தை பிடுங்கணும்.. அந்த நடிகரை உள்ளே இழுத்தாத்தான் சரி பட்டு வரும்.. மாஸ்டர் பிளான்?

டைட்டில் வின்னர் இவர் தானா
இவர்களில் நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 பேர் மட்டும் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளனர். தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஆன்லைன் ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுக்களை பெற்று பாலா, நிரூப் மற்றும் தாமரை தான் டாப் 3 இடங்களை பிடித்துள்ளனர். பாலா தான் டைட்டில் வெல்ல போகிறார் என கூறப்படுகிறது.

சிறப்பு விருந்தினர் யார்
இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். சிறப்பு விருந்தினராக யாரும் பங்கேற்கவில்லை. அதே சமயம் இதுவரை வெளியேறிய பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள், முந்தைய பிக்பாஸ் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

யாரெல்லாம் வரப்போகிறார்கள்
பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, சினிமா ஷுட்டிங் காரணமாக தன்னால் பங்கேற்க முடியாது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதே சமயம் பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா மற்றும் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஆகியோர் ஸ்பெஷல் கெஸ்டாக வர உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவிற்கான லேட்டஸ்ட் ப்ரோமோவில், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வீட்டிற்குள் சென்று இசைக்க, போட்டியாளர்கள் அவர்களுடன் ஆட்டம் போடுகிறார்.

குத்தாட்டம் போட்ட சிம்பு
அப்போது மாஸாக வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து, சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சிம்பு. அவரும் போட்டியாளர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார். பிறகு வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் பேசும் சிம்பு, யார் வெற்றி பெறுவீர்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார் சிம்பு. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் நான் தான் என நச்சுன்னு பதில் சொல்கிறார் தாமரை. ஆனால் சிம்புவோ, என்ன நடக்க போகிறது, யாருக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது என சொல்கிறார். இதனால் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.