Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆஹா...அடுத்த ஆட்டமா... பிக்பாஸ் அல்டிமேட் வைல்கார்டு என்ட்ரி இவரா ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்டதும் ஏற்கனவே வனிதா ஆட்டமே தாங்க முடியல. இதுல இவர் வேறயா. ஆட்டம் இனி கலைகட்டுமே என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர ஷோவாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் பரபரப்பாக 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வாக்குவாதங்கள், பழைய கதைகள் என சுவாரஸ்யம் சூடுபிடித்து வருகிறது.
பிக்பாஸ் பதில் சொல்லுங்க...நள்ளிரவில் கெஞ்சிய சுட்டிப்பிள்ளை ஷாரிக்

வனிதா ஃபேன்ஸ் ஆதரவு
வந்த உடனேயே வனிதா தனது ஆட்டத்தை ஆரம்பித்திருப்பது சிலவரிடம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளது என பலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். வனிதா ஃபேன்ஸ் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

வெளியேற போவது யார்
போட்டியாளர்களின் பேசும் பரபரப்பு போதாது என்று, பிக்பாசும் தனது பங்கிற்கு நிகழ்ச்சி துவங்கிய அடுத்த நாளே நாமினேஷனை நடத்தி கொளுத்தி போட்டுள்ளார். 14 போட்டியாளர்களில் முதல் வாரத்திலேயே 8 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்களின் யார் முதல் ஆளாக வெளியேற்றப்படுவார் என அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர் வெளியேறுவார் என ஒருவரை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவரை பற்றிய எண்ணம் மாறும் அளவிற்கு வேறு ஒன்று நடக்கிறது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் புதிய ட்விஸ்ட்
எவிக்ஷன் பற்றிய குழப்பமே உச்சத்தில் இருக்கும் போது, புதிய ட்விஸ்ட்டாக பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்கார்டு என்ட்ரியாக வர போகிறவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கேட்டு...இவரா...என அனைவரும் ஆச்சரியத்தில் அசந்து போய் உள்ளனர். இன்னும் சிலர் இனி ஆட்டம் கலைகட்டும். வனிதாவிற்கு சரியான போட்டி என கூறி வருகின்றனர்.

வைல்கார்டு என்ட்ரி இவரா
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வைல்கார்டு என்ட்ரியாக நடிகை ஓவியா தான் உள்ளே வர போகிறாராம். விரைவில் வைல்கார்டு என்ட்ரி நடைபெற உள்ளதாம். 14 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்ததால் அவர்களை குஷிப்படுத்த தான் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியாவை உள்ளே கொண்டு வர போகிறார்களாம்.
Recommended Video

இனி ஆட்டம் கலைகட்டுமே
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஓவியா, அனைத்து சீசன்களிலும் பாப்புலரான போட்டியாளராக இருந்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் முதல் முறையாக ஆர்மி துவங்கப்பட்டதே ஓவியாவிற்கு தான். முதல் சீசனிலேயே இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இவரின் நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் முதல் சீசனில் பாதியில் வெளியேறிய ஓவியா, தற்போது அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.