Don't Miss!
- News
அடேங்கப்பா.. 6 கோடி வருசம் பழசாம்! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் அல்டிமேட்...பாலாவிற்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நேற்று நிறைவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாலா வென்ற பரிசுத் தொகை பற்றிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. டைட்டிலை வென்ற பாலாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஓடிடி வெர்சனாக முதல் முறையாக 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி துவங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்த போட்டி துவங்கப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு ஹன்சிகா வந்ததற்கு இது தான் காரணமா?

ரசிகர்களை கவர்ந்த சிம்பு
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சிறிது நாட்களிலேயே அவர் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு பிறகு சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சிம்பு தொகுத்து வழங்கிய விதம், நட்புடன் போட்டியாளர்களிடம் பேசுவது, ஜாலியான அவரின் நடவடிக்கை என அனைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதனால் பலர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர்.

டைட்டில் வின்னர் பாலா
14 போட்டியாளர்களுடன் 2 வைல்ட் கார்டு என்ட்ரியாக மொத்தம் 16 பேர் போட்டியில் பங்கேற்றனர். 70 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை, ரம்யா பாண்டியன் ஆகியோர் தகுதி பெற்றனர். இவர்களில் பாலா, பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனின் டைட்டிலை வென்றார்.

இவ்வளவு பரிசுத் தொகையா
பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றி பெற்ற பாலாவிற்கு கோப்பையை, சிம்பு வழங்கினார். டிராஃபியுடன் ரூ.20 லட்சம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகை மற்றும் டைட்டில் வின்னர் பரிசுத் தொகை என மொத்தமாக ரூ.50 லட்சத்தை எடுத்துச் சென்றார் பாலா. ஆன்லைனில் நடத்தப்பட்ட ஓட்டுப்பதிவில் பாலாவுக்கு 63 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜுலி தான் பாலா வின் பண்ண காரணமா
ரன்னர் அப்பை நிரூப்பும், இரண்டாவது ரன்னர் அப்பை ரம்யா பாண்டியனும் வென்றுள்ளனர். நான்காவது இடம் தாமரைக்கு கிடைத்துள்ளது. ஐந்தாவது இடம் ஜுலிக்கும், ஆறாவது இடம் அபிராமிக்கும் கிடைத்துள்ளது. ஜுலி வெளியேறி சென்ற பிறகு பாலாவிற்கு பதிவான ஓட்டுக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.