ரசிகர்களின் அதிருப்தி பெற்ற இருவர்... இந்த வாரம் வெளியேற போவது யார் ?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் துவங்கிய சில நாட்களிலேயே ரசிகர்களை கவருவதற்கு பதிலாக, அதிருப்தி பெற்ற இரண்டு போட்டியாளர்கள் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டிவி.,யில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஓடிடி வெர்சன் சமீபத்தில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளனர்.

நாமினேட் செய்யப்பட்ட 8 பேர்

நாமினேட் செய்யப்பட்ட 8 பேர்

48 நாட்களைக் கொண்ட நிகழ்ச்சி என்பதால் போட்டி துவங்கிய அடுத்த நாளே நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நிரூப், வனிதா, சுரேஷ், அனிதா, சுருதி, ஜுலி, அபினய், சினேகன் ஆகிய 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் வாரம் எவிக்ஷன் இருக்காது என போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள்.

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

ஆனால் லேட்டஸ்ட் தகவலாக , தற்போது ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஓட்டுப்பதிவில் வனிதா, அபினய், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் தான் குறைவான ஓட்டுக்களைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்களாம். இதில் சுரேஷை விட வனிதா மற்றும் அபினய்யிற்கு எதிராகவே அதிகமானவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் தான் முதல் குறியா

இவர் தான் முதல் குறியா

சுரேஷ், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக கூறி தான் பலர் அவரை நாமினேட் செய்தார்கள். ஆனால் மக்களிடம் அது பெரிதாக எடுபடவில்லையாம். அதனால் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மக்களின் கவனம் முழுவதும் வனிதா மற்றும் அபினய் மீது தான் தற்போது இருந்து வருகிறதாம். வனிதா மீதான கிரைம் ரேட் தான் டாப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியேற போகிறவர் இவரா

வெளியேற போகிறவர் இவரா

வனிதா, வீட்டிற்குள் வந்தது முதலே போட்டியாளர்களை டாமினேட் செய்து வருகிறார். எல்லாவற்றிற்கும் பிரச்சனை செய்து, சண்டை போடுவது அனைவரிடமும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வெளியேற்ற பட்டியலில் முதல் ஆளாக இருப்பது வனிதா தானாம். அதே போல் 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியில் அபினய், புகைப்பிடித்த காட்சி பலருக்கும் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். வனிதா கன்டென்ட் கொடுக்கிறார் என்பதால் அவரை வெளியேற்ற மாட்டார்கள். அதனால் முதல் ஆளாக அபினய் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X