பிக்பாஸ் அல்டிமேட்...கமலுக்கு ஏற்பட்ட அதே நெருக்கடிகள் சிம்புவிற்கும் ஏற்படுமா ?

சென்னை : சினிமா ஷுட்டிங் பாதிக்கப்படுவதை பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் விலகியதற்கு காரணமாக கூறினாலும், பல நெருக்கடிகள் காரணமாகவே அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது புதிய ஹோஸ்டாக அறிவிக்கப்பட்டுள்ள சிம்புவிற்கும் அதே போன்ற நெருக்கடிகள் ஏற்படாதா என பலர் கேட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்தவர்கள் தான் சின்னத்திரை பக்கம் வருவார்கள் என சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த நிலை சொத்தமாக மாறி விட்டது. சினிமாவில் படு பிஸியாக இருப்பவர்களும் சின்னத்திரையில் டாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வந்து விடுகிறார்கள். கமல், மோகன்லால், விஜய் சேதுபதி, தமன்னா, சல்மான் கான் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சிம்புவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

பிக்பாசை கைவிட்ட கமல்

பிக்பாசை கைவிட்ட கமல்

பிக்பாஸ் ஐந்து சீசன்களைத் தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார் கமல். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட, வீடியோ கான்ஃபிரன்சிங்கில் வந்து ரசிகர்கள், போட்டியாளர்களை சந்தித்தார். குணமாகி டிஸ்சார்ஜ் ஆனதும் நேராக பிக்பாஸ் செட்டிற்கு சென்று ஷுட்டிங்கில் கலந்து கொண்டார். மக்களை சந்திக்க கிடைக்கும் சிறிய வாய்ப்பையும் நான் தவற விட மாட்டேன் என சொன்னவர், திடீரென பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக கூறினார்.

கமல் விலக இது தான் காரணமா

கமல் விலக இது தான் காரணமா

தான் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தள்ளி போய், பாதிக்கப்பட்டு வருவதாகவும், தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக மற்ற நடிகர், நடிகைகளின் வேலைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கனத்த இதயத்துடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாகவும், பிக்பாஸ் சீசன் 6 ல் வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் விக்ரம் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கி இருந்த ஹாட் ஸ்டார் கொடுத்த நெருக்கடி தான் கமல் விலக காரணம் என்றெல்லாம் பல விதமாக தகவல்கள் பரவின.

படங்களில் பிஸியாக இருக்கும் சிம்பு

படங்களில் பிஸியாக இருக்கும் சிம்பு

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இந்த வாரத்திலிருந்து சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என ஹார்ட்ஸ்டார் தமிழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்தை முடித்த பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சிம்பு. இந்த படங்கள் தவிர இன்னும் சில படங்களுக்காகவும் சிம்புவுடன் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் சிம்பு ஒப்புக் கொண்டுள்ளார்.

சிம்புவிற்கும் நெருக்கடி வருமா

சிம்புவிற்கும் நெருக்கடி வருமா

மற்ற படங்களின் வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கையில், விக்ரம் படத்தில் மட்டுமே நடித்து வரும் கமல், சினிமாவை காரணம் காட்டி பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் சிம்பு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதோடு அவர் பிக்பாஸிற்கு வந்திருப்பது அவருக்கு புதிய நெருக்கடியை தான் தரும். இந்த நெருக்கடிகள் பற்றி சிம்பு நிச்சயம் யோசித்திருப்பார். அப்படி இருந்தும் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள். ஒருவேளை சிம்புவின் இதற்கான பதிலை, நிகழ்ச்சியின் போது சொல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X