பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த 22ம் தேதி முடிவுக்கு வந்தது.
ஷிவின், விக்ரமன், அசீம் மூவரும் பிக் பாஸ் சீசன் 6 பைனலிஸ்ட்டாக மேடையேறினர்.

இவர்களில் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான விக்ரமன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் பாவனியை விக்ரமன் வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருவதோடு, ரியலாகவும் அவர் துணிவான ஆள்தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 அறம் வெல்லும் விக்ரமன்

அறம் வெல்லும் விக்ரமன்

கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கான மேடையில் ஏறினர். அதிலும் முதல் ஆளாக ஷிவின் வெளியேற்றப்பட அசீம் - விக்ரமன் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற போட்டி வந்தது. இதில் அதிகமான ரசிகர்களின் ஆதரவோடு விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 பிக் பாஸ் பாவனியுடன் மோதல்

பிக் பாஸ் பாவனியுடன் மோதல்

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியது முதல் நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளையாடிய விக்ரமன் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கில் மக்களிடம் ட்ரெண்ட் ஆனார். பிக் பாஸ் வீட்டில் இருந்ததைப் போலவே சொந்த வாழ்க்கையிலும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர் விக்ரமன். அதனால் நியாயமான விசயங்களுக்காக தேவையான இடங்களில் மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டு வரும் விக்ரமன், பிக் பாஸ் பாவனியையும் வெளுத்து வாங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற பாவனி தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடித்து ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.

 சின்ன தம்பி சீரியல்

சின்ன தம்பி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன தம்பி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் பாவனி. அதேபோல் EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் விக்ரமனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சொந்த வாழ்க்கையில் அவர் எப்படியான குணாதிசயம் கொண்டவரோ அப்படியே இந்த சீரியலிலும் தன்மையானவராக நடித்திருந்தார். இந்த சீரியலில் விக்ரமன் - பாவனி இடையே வரும் ஒரு மோதல் காட்சியை ரசிகர்கள் இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 உன்ன அடிச்சா எனக்குதான் அசிங்கம்

உன்ன அடிச்சா எனக்குதான் அசிங்கம்

EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் வில்லியாக நடித்த பாவனி, ஒரு காட்சியில் பெரியவர் ஒருவரை மரியாதை குறைவாக பேசுவார். அதாவது பெரியவர் ஒருவர் பாவனிக்கு காபி கொடுக்க வரும் போது அது அவரின் காலில் கொட்டிவிடும். இதனால் கோபமாகும் பாவனி அதனை துடைத்துவிடுமாறு பெரியவருக்கு கட்டளையிடுவார். அப்போது அந்த சீனில் வரும் விக்ரமன், "உன் அப்பா வயசு இருக்கும் மனுசனை ஷூ துடைக்க சொல்ற கன்னத்தில் அடிக்க போவார். அதன்பிறகு உன்னை அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம்" என பாவனியை கடந்து செல்வார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சீரியல், ரியல் லைஃப், பிக் பாஸ் வீடு என எல்லா இடங்களிலும் விக்ரமன் ஒரே மாதிரி தான் இருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X