நான் தப்பா தொடல... அக்ஷரா விவகாரம் குறித்து டீப் டிஸ்கஷனில் சிபி- நிரூப்.. பிக்பாஸ் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்களுக்காக அல்லாமல் மற்றவர்களுக்காக விளையாட வேண்டும்.

இதில் பிடிக்காதவர்களின் பொம்மைகளை எடுத்து அவர்களை தோற்கடிக்கலாம். பிடித்தவர்களின் பொம்மைகளை எடுத்து வெற்றி பெறச் செய்யலாம்.

வார்த்தைகளை விட்ட சிபி

வார்த்தைகளை விட்ட சிபி

இந்த டாஸ்க்கின் முதல் நாளான நேற்று பல்வேறு களேபரங்கள் அரங்கேறின. போட்டியின் போது நிரூப் விளையாடிய விதம் பிடிக்காமல் சக ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிபி நிரூப்புக்கு ஆதரவாக பேசி வார்த்தைகளை விட்டார்.

முதுகில் குத்திய இசைவாணி

முதுகில் குத்திய இசைவாணி

இதானல் நேற்றைய நிகழ்ச்சியில் பெரும்பாலும் பீப் சவுண்டு போடப்பட்டது. சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றும் பொம்மை டாஸ்க் தொடருவது புரமோக்களில் தெரியவந்துள்ளது. முதல் புரமோவில் இசைவாணி அண்ணாச்சியின் முதுகில் குத்தினார். இதனை பகீரங்கமாக கூறினார் இமான் அண்ணாச்சி.

நேற்று நடந்த பிரச்சனை

நேற்று நடந்த பிரச்சனை

இரண்டாவது புரமோவில் நிரூப்புக்கும் அபினய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவது தெரியவந்தது. இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று டாஸ்க்கின் போது நடந்த பிரச்சனை குறித்து சிபி, நிரூப் ஆகியோர் அண்ணாச்சியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்ஸிங் தெரியும் என்றார்

பாக்ஸிங் தெரியும் என்றார்

இதில் பேசும் சிபி, தனக்கு அக்ஷரா மீதும் வருண் மீதும் தனக்கு கோபமே இல்லை என்கிறார். அக்ஷரா அவர் சொன்ன வார்த்தைக்கு எதிராக அவரே நடந்து கொண்டார். வருண் ஒரு பொம்பளைய போய் இப்படி புடிக்கிறீயே என்று கேட்டார். எனக்கு அது பிடிக்கவில்லை. அக்ஷரா எனக்கு பாக்ஸிங் தெரியும்.. முடிஞ்சா வந்து பாருங்க என்று கூறினார்.

நான் தவறாக தொடவில்லை

நான் தவறாக தொடவில்லை

அதே வேலையை இன்னொருத்தர் பண்ணும் போது, எவ்ளோ கோபம் வருது... இதுதான் டபுள் ஸ்டாண்ட்.. என்று தன்னுடைய நியாயத்தை கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும் நிரூப், நான் உன்னை தவறாக தொட்டேனா என்று கேட்டேன், நான் தவறாக தொடவும் இல்லை, அக்ஷராவும் இல்லை என்றார். அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்.

விளையாட விடாமல் பிடித்ததுதான் தவறு

விளையாட விடாமல் பிடித்ததுதான் தவறு

இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. நேற்றைய எபிசோடிலேயே அக்ஷரா தெள்ளத் தெளிவாக நீ என்னை தொட்டதை பற்றி நான் எதுவும் தவறாக பேசவில்லை. ஆனால் நீ என்னை விளையாட விடாமல் பிடித்ததுதான் தவறு என்று கூறினார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கமல் விசாரிப்பாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X