பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர்தான்... மிகக் குறைந்த வாக்கு... லீக்கான தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 45 நாட்களை கடந்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து எவிஷனுக்கு செல்லாமலேயே வெளியேறினார்.

9 பேர் நாமினேஷனில்
நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா என 5 போட்டியாளர்கள் இதுவரை எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் புராசஸில் 9 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

யார் இந்த வாரம் வெளியேறுவார்?
அதன்படி நாமினேஷன் லிஸ்ட்டில் பாவனி, இமான் அண்ணாச்சி, அபினய், சிபி, தாமரை செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்ஷரா ரெட்டி என 9 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பெயரை கெடுத்துக்கொள்ளும் இசை
அபினய், இமான் அண்ணாச்சி ஆகியோர் கடந்த சில வாரங்களாக எவிக்ஷனில் இறுதி வரை வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இசைவாணி வாண்ட்டடாக வம்பில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

விளாசிய கமல்
கடந்த வாரம் பிக்பாஸ் விருது விழாவில் இமான் அண்ணாச்சிக்கு வெத்து வேட்டு என்ற விருதை வழங்கி விமர்சித்த இசைவாணி, அவர் கொடுத்த தொட்டாச்சினிங்கி என்ற விருதை தூக்கி எறிந்தார். இதற்காக கமலே அவரை தொட்டாச்சினிங்கி என்று விளாசினார்.

புரிந்துகொள்ளாத இசைவாணி
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் முகத்தைக் காட்டி வருகிறார் இசைவாணி. மற்ற ஹவுஸ்மேட்ஸ் சொல்வதை புரிந்து கொள்ளாமல் விளையாட்டுக்கு பேசுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு சண்டை போட்டு வருகிறார்.

செவுலில் விட்டுவிடுவேன்
குறிப்பாக தாமரை செல்வி, இமான் அண்ணாச்சி, ராஜு ஆகியோரிடம் மோசமாக நடந்து கொள்கிறார் இசைவாணி. நேற்றைய எபிசோடில் கண்ணாடி டாஸ்க்கில் தாமரை செல்வி பேசும் போது அவ்வளவு ஆட்டியூட் காட்டினார். பின்னர் அபினய்யிடம் ஓங்கி செவுலில் விட்டுவிடுவேன் என்று தாமரை குறித்து பேசினார் இசைவாணி.

எரிச்சலாகும் நெட்டிசன்கள்
தன்னைப் பற்றி யாருமே எதுவும் பேசக் கூடாது என்ற மன நிலையில் உள்ள இசைவாணி அபினய் உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்களிடம் மட்டுமே நெருக்கம் காட்டி வருகிறார். இசைவாணி தனது நடவடிக்கையால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். அவரது நடவடிக்கையால் எரிச்சலாகும் நெட்டிசன்கள் அவரை முதலில் வெளியேற்றுங்கள் என கூறி வருகின்றனர்.

கடைசி இடத்தில் இசைவாணி
இந்நிலையில் இந்த வாரம் பதிவான வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிபி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபினய், பாவனி ஆகியோர் வரிசையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, நிரூப் ஆகியோர் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளனர். இதில் குறைவான வாக்குகளை பெற்று இசைவாணி கடைசி இடத்தை பிடித்துள்ளார்.

இந்த வாரம் இவர்தான்?
இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இசைவாணிதான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிக்க இன்று கடைசி நாள் என்பதால் இதில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பது நாளை தெரியவரும். இருப்பினும் இசைவாணியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











