பிக்பாஸ் வீட்டில் முகமூடி போடாமல் இருப்பவர்கள் இவர்கள் மட்டும்தான்.. கமல் கொடுத்த கலக்கல் டாஸ்க்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் யாரெல்லாம் இன்னமும் முகமூடியை கழட்டாமல் உள்ளார்கள் என முகமூடி வழங்கும் டாஸ்க்கை கொடுத்தார் கமல்.

நேற்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் இந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதித்தார். இதனை தொடர்ந்து பாராட்டுக்குரியவர்களை பாராட்டிய கமல், விளாச வேண்டியவர்களை விளாசினார்.

இறுதியாக இந்த வீட்டில் சிலரிடம் பேச முடிவதில்லை, அதற்கு காரணம் அவர்கள் இன்னமும் பேசு பொருள் ஆகவில்லை என்ற கமல், யாரெல்லாம் முகமூடி போட்டிருக்கிறார்கள் என ஒரு டாஸ்க்கை கொடுத்தார்.

முகமூடி டாஸ்க்

முகமூடி டாஸ்க்

இதில் ஒவ்வொரு போட்டியாளரும் யார் இன்னும் முகமூடியை கழட்டாமல் உள்ளார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு இந்த முகமூடியை கொடுங்கள் என்றார். இதனை தொடர்ந்து, முதல் நபராக பிரியங்கா, ஐக்கி பெர்ரிக்கு முகமூடியை கொடுத்தார். மேலும் ஐக்கி சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என்று கூறினார்.

பாஸிட்டிவ் முகமூடி

பாஸிட்டிவ் முகமூடி

அடுத்தப்படியாக நிரூப், அக்ஷராவக்கு முகமூடி கொடுத்தார். தான் சண்டை போடும் கேரக்டர் இல்லை என்று கூறிய அக்ஷரா டீம்மோடு இருக்கும் போது பிரச்சனை என்றால் நல்லா சண்டைபோடுகிறார். அபினய் வருணுக்கு முகமூடியை கொடுத்தார். இது நெகட்டிவாக இல்லை, அவர் ஜாலியான கேரக்டர், ஆனால் அது இன்னும் வெளிப்படவில்லை என்றார்.

பாவனி கொடுத்த முகமூடி

பாவனி கொடுத்த முகமூடி

இதேபோல் ஸ்ருதி, அக்ஷாராவுக்கு முகமூடி கொடுத்தார். பாவனி ராஜுவுக்கு முகடியை கொடுத்து அவர் சண்டை போடாமல் கோபப்படாமல் இருக்கிறார் என்று கூறினார். அடுத்து மது ஐக்கி பெர்ரிக்கு முகமூடி கொடுத்து அவர் முகமூடி போட்டிருப்பதாக கூறினார். இசைவாணி ராஜுவுக்கு முகமூடி கொடுத்தார். அவர் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறார் என்றார்.

பிரியங்கா வில்லி

பிரியங்கா வில்லி

இதேபோல் இமான் அண்ணாச்சி சின்னப்பொண்ணுவுக்கு முகமூடியை கொடுத்தார். சிபி ஐக்கி பெர்ரிக்கு முகமூடி கொடுத்தார். அவர் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் என்றா. அடுத்து வருண் சின்னப்பொண்ணு முகமூடி அணிந்திருப்பதாக கூறினார். ஐக்கி பிரியங்கா முகமூடி அணிந்திருப்பதாக கூறினார். பிரியங்கா தனக்குள் இருக்கும் வில்லி கேரக்டரை கன்ட்ரோல் பண்ணுவதாககூறினார்.

பாவனிக்கு முகமூடி

பாவனிக்கு முகமூடி

தாமரை இசைவாணி முகமூடி அணிந்திருப்பதாக கூறி முகமூடியை கொடுத்தார். சின்னப்பொண்ணு வருணுக்கு முகமூடி கொடுத்தார். இதேபோல் அக்ஷரா இசைவாணிக்கு கொடுத்தார். ராஜு பாவனி ஃபேக்காக இருப்பதாக கூறி அவருக்கு முகமூடி கொடுத்தார்.

முகமூடி இல்லாதவர்கள்

முகமூடி இல்லாதவர்கள்

15 போட்டியாளர்களில் இமான், நிரூப் தாமரை, மதுமிதா அபினய், சிபி, ஸ்ருதி ஆகியோர் மட்டுமே முகமூடி அணியவில்லை. மற்ற அனைத்து போட்டியாளர்களுக்குமே முகமூடி கொடுக்கப்பட்டது. இவர்களின் முகமூடி எப்போது கழலும் என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X