எந்த நேரத்துல வேணாலும் அவன் கூட பேசுவேன்.. நீ யாரு கேட்க? சிபி அன்ட் ராஜுவை செம ரைடுவிட்ட பாவனி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிந்து மூன்று கட்சிகளாக உள்ளனர்.

மாநாட்டில் வாக்குவாதம்

மாநாட்டில் வாக்குவாதம்

சஞ்சீவ், சிபி, பிரியங்கா ஆகியோர் கட்சிகளின் தலைவர்களாக உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமில்லாம் உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலுமே பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் மாநாட்டில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுவது தெரிய வந்தது.

பாவனி - அபினய் ரிலேஷன்ஷிப்

பாவனி - அபினய் ரிலேஷன்ஷிப்

இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் தனக்கும் அபினய்க்கும் உள்ள உறவு குறித்து நேற்றைய எபிசோடில் சிபி பேசியது மற்றும் இன்று கார்டன் ஏரியாவில் நடந்த அரசியல் மாநாட்டில் பாவனி அபினய் ரிலேஷன்ஷிப் குறித்து பிரியங்கா மற்றும் ராஜு பேசியது ஆகியவை தொடர்பாக பாவனி கோபப்பட்டதாக தெரிகிறது.

என் இஷ்டம்...

என் இஷ்டம்...

அந்த புரமோவில் பேசும் பாவனி, அபினய்யை குறிப்பிட்டு அவன் கூட பேசுவேன், தனியா உட்காந்து பேசுவேன்.. உங்களுக்கு என்ன? நான் அவன் கூட எந்த டைம்ல வேண்டுமானாலும் உட்காந்து பேசுவேன்.. உங்களுக்கு என்ன? அது என் இஷ்டம். அவன் இஷ்டம் என ஆக்ரோஷமாக கத்துகிறார்.

நீ யார் பேசுறதுக்கு?

நீ யார் பேசுறதுக்கு?

அப்போது குறுக்கிடும் ராஜு இந்த கேள்வி ஏன் வந்தது என்று சொல்லவா என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் பாவனி, இதைப்பற்றி பேச உனக்கு உரிமையே கொடுக்கவில்லை. பின் நீ ஏன் அதுகுறித்து பேசுகிறாய்? நீ யார்? அதைப்பற்றி பேச நீ யார் என ஹைபிச்சில் கத்துகிறார்.

என் பர்சனல்

என் பர்சனல்

தொடர்ந்து பேசும் சிபி, நேற்றைய எபிசோடில் பேசிய இது லவ் இல்லன்னு சொல்றேன் ஃபிரண்ட்ஷிப் இல்லன்னு சொல்றேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோனுதோ அதைதான் நான் பேச முடியும் என்கிறார். அப்போது கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாவனி, அது என்னுடைய பர்சனல் என கத்துகிறார்.

உன் பர்சனலா?

உன் பர்சனலா?

அதற்கு சிபி, நான் பேசுவது என்னுடைய பர்சனல் நானும் பேசுவேன் என்கிறார். இதனைக்கேட்ட பாவனி உன்னுடைய பர்சனலா என கேட்டு ஆவேசமாகிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் பாவனியும் அபினய்யும் பழகுவ நட்பை தாண்டிய ஒன்றாக உள்ளது என ஹவுஸ்மேட்ஸ் பேசி வருகின்றனர்.

ஏதாவது ஃபீலிங்ஸ் உள்ளதா?

ஏதாவது ஃபீலிங்ஸ் உள்ளதா?

பாவனியுடன் யாராவது நெருக்கமாக பழகினால், அபினய் அவர்கள் மீது கோபப்படுகிறார். பாவனி மீது ரொம்பவே பொஸ்ஸஸிவ்வாக உள்ளார் அபினய். பாவனியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் வாரத்திலேயே உங்களுக்கு என் மீது ஏதாவது ஃபீலிங்ஸ் உள்ளதா என அபினய்யிடம் கேட்டு திக்குமுக்காட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X