கடன் வாங்கி சட்டை போடுறேன்.. என்னை போய் அப்படி சொல்லீட்டீங்களே.. கண்ணீர்விட்டு கலங்க வைத்த தாமரை!

சென்னை: கடன் வாங்கி டிரெஸ் போடும் என்னை அப்படி சொல்லிவிட்டீர்களே என இமான் அண்ணாச்சியிடம் கூறி கண்ணீர்விட்டார் தாமரை செல்வி.

பிக்பாஸ் வீட்டில் இமான் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏக பொருத்தமாக உள்ளது.

சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் இமான் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

தாமரைக்கும் அண்ணாச்சிக்கும் மனக்கசப்பு

தாமரைக்கும் அண்ணாச்சிக்கும் மனக்கசப்பு

இந்நிலையில் இந்த வாரம் தாமரை செல்விக்கும் அண்ணாச்சிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது பல இடங்களில் தெரிந்தது. பொம்மை டாஸ்க், பிக்பாஸ் விருது விழா என பல இடங்களில் இமான் அண்ணாச்சிக்கும் தாமரை செல்விக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது தெரியவந்தது.

தாமரை குற்றச்சாட்டு

தாமரை குற்றச்சாட்டு


இதேபோல் தாமரை செல்விக்கும் ராஜுவுக்கும் இடையேயும் டெர்ம்ஸ் சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது. அதோடு எந்த விஷயத்தையும் நேரடியாக பேசாத இருவரை கூறுமாறு ஹவுஸ்மேட்டுகளுக்கு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.
அப்போது பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ராஜு மற்றும் அண்ணாச்சியின் பெயரையே கூறினர்.

அள்ளி ஊற்றிய தாமரை

அள்ளி ஊற்றிய தாமரை

இதையடுத்து அவர்கள் இருவரையும் கார்டன் ஏரியாவில் அமர வைத்து அவர்கள் மீது ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு மக் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது அண்ணாச்சியின் மீது மக்கு மக்காக தண்ணீரை மொண்டு ஊற்றினார் தாமரை செல்வி.

மன வருத்தம்

மன வருத்தம்


பின்னர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து அண்ணாச்சி, ராஜு மற்றும் தாமரை செல்வி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜு மற்றும் அண்ணாச்சி மீதான மனஸ்தாபம் குறித்து பேசினார். ராஜு தன்னை வீட்டில் இருக்கக்கூடாது என்று தான் நாமினேட் செய்தார் என்று மன வருத்தத்தை கொட்டினார்.

முகத்தை கண்ணாடியில் பார்

முகத்தை கண்ணாடியில் பார்

பின்னர் பொம்மை டாஸ்க்கின் போது அண்ணாச்சி கூறியதை குறித்தும் கேட்ட தாமரை செல்வி, ஒரு முறை உன் முகத்தை போய் கண்ணாடியில் பார் என்று கூறியது தன்னை பெரிதும் காயப்படுத்திவிட்டதாக கூறினார். அதற்கு பதில் கூறிய அண்ணாச்சி, தான் அந்த விஷயத்தை விளையாட்டாகதான் கூறினேன் என்றார்.

கடன் வாங்கி டிரெஸ் போடுகிறேன்

கடன் வாங்கி டிரெஸ் போடுகிறேன்

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத தாமரை, நான் இங்குள்ள ஒவ்வொருவரிடமும் டிரெஸ் கடன் வாங்கி கடன் வாங்கி போட்டுக் கொள்கிறேன். நீங்கள் இப்படி சொல்லும் போது நான் உடுத்தும் உடை சரியில்லையோ என்று தோன்றியது. நீங்கள் விளையாட்டாய் கூறியது, எனக்கு ரொம்ப வலிக்கிறது என்று கூறி கண்ணீர்விட்டார் தாமரை.

திருத்திக்கொண்ட அண்ணாச்சி

திருத்திக்கொண்ட அண்ணாச்சி

இதனைக் கேட்ட அண்ணாச்சி, இனிமேல் அதுமாதிரி பேசவே மாட்டேன் என தனது தவறை உடனடியாக திருத்திக் கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள், கிராமத்தில் இருந்து வந்தவர், இதுபோன்ற நிகழ்ச்சியில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது தாழ்வு மனப்பான்மை வரும்தான் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X