அப்போ.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போறது இவர்தானா? அடித்து சொல்லும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட்டில் 9 பேர் இடம்பிடித்துள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது.

இதில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் மக்களின் அதிக வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் சேவ் செய்யப்படுவார்கள். குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

தலா 3 பேர் நாமினேஷன்

தலா 3 பேர் நாமினேஷன்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. வழக்கமாக ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை நாமினேட் செய்யுமாறு கூறுவார் பிக்பாஸ். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு போட்டியாளரையும் மூன்று பேரை நாமினேட் செய்யுமாறு கூறியுள்ளார்.

நாமினேஷன் லிஸ்ட்டில் 9 பேர்

நாமினேஷன் லிஸ்ட்டில் 9 பேர்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸில் பாவனி, இமான் அண்ணாச்சி, அபினய், சிபி, தாமரை செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்ஷரா ரெட்டி என 9 பேர் இடம் பிடித்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்போதுதான் விளையாட ஆரம்பித்துள்ளார்

இப்போதுதான் விளையாட ஆரம்பித்துள்ளார்

இதில் தாமரை செல்வி அடிக்கடி கோபப்பட்டு என்ன பேசுகிறோம் என்று புரியாமல் வார்த்தையை விடுகிறார். இதனால் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தற்போதுதான் அவர் விளையாட தொடங்கியுள்ளார் என்பதால் அவரை பிக்பாஸ் இன்னும் சில நாட்கள் வைத்திருப்பார் என கூறுகின்றனர்.

அண்ணாச்சியை டார்கெட் செய்வதால்

அண்ணாச்சியை டார்கெட் செய்வதால்

இமான் அண்ணாச்சி கடந்த வாரம் கடைசி வரை வந்ததால் அவர் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். ஆனால் இசைவாணி, பிரியங்கா உட்பட சில போட்டியாளர்கள் அண்ணாச்சியை டார்கெட் செய்வதால் அது அவருக்கு சாதகமாக முடியும் என்றும் ரசிகர்கள கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக காப்பாற்றப்பட்டு

கடைசியாக காப்பாற்றப்பட்டு

இதேபோல் அபினய்யும் இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளார். இருப்பினும் எதிலும் தனது கருத்தை தெளிவாக முன்வைக்காமல் உள்ளார். இதனால் அபினய்யும் டேஞ்சர் ஸோனில்தான் உள்ளார். வாரா வாரம் கடைசியாக காப்பாற்றப்பட்டு வருகிறார்.

எரிச்சலாக்கும் இசைவாணி

எரிச்சலாக்கும் இசைவாணி

இதனிடையே இசைவாணி பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதம் நாளுக்கு நாள் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஓவர் ஆட்டியூட் காட்டி வருகிறார் இசைவாணி. அண்ணாச்சி, தாமரை செல்வி என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்கிறார்.

இவர்தான் வெளியேறுவார்

இவர்தான் வெளியேறுவார்

வாரா வாரம் ஒரு பிரச்சனையில் சிக்கி கமலிடமும் வாங்கிக் கட்டி கொள்கிறார். நேற்றைய எபிசோடிலும் தாமரை செல்வியிடம் முகத்தை காட்டினார் இசைவாணி. இதனால் இசைவாணியின் பெயர் நாளுக்கு நாள் டேமேஜ் ஆகி வருகிறது. அவரது நடத்தையும் எரிச்சலை ஏற்படுத்தி வருவதால் இந்த வாரம் இசைவாணி வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இசைவாணியை அனுப்புங்கள்

இசைவாணியை அனுப்புங்கள்

பலரும் இசைவாணியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இசைவாணியின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், இந்த இசைவாணி பாய்சனை இந்த வாரம் அடிச்சி பத்துங்கப்பா... இந்த பிக்பாஸுக்கு பிட் ஆகாத ஆளு இந்த ஆளு... என பதிவிட்டுள்ளார்.

அவமானம் இசைவாணி..

அவமானம் இசைவாணி..

மற்றொரு நெட்டிசனான இவர், பிரியங்காவும் கத்திதான் பேசுகிறார், தாமரை செல்வியும் கத்திதான் பேசுகிறார். இருவரையும் ஆடியன்ஸ் சமமாகதான் பார்க்கின்றனர். ஆனால் இசைவாணி ஒருவரை உயர்வாகவும் மற்றொருவரை தாழ்வாகவும் பார்க்கிறார்... அவமானம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X