Bigil: டீசரும் இல்ல டிரெய்லரும் இல்ல.. ஆனா இன்று முக்கிய அப்டேட் வருது... ரெடியாகுங்க விஜய் ரசிகாஸ்!
சென்னை: பிகில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் உள்ளிட்ட அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார்.
சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி உள்ளிட்ட வழக்கமான அப்டேட்டாக இல்லாமல், இது தனித்துவமாக இருக்கும் என அர்ச்சனா கல்பாதி குறிப்பிட்டுள்ளார். 'அது என்ன என்பதை கண்டுபிடியுங்கள்' என ரசிகர்களுக்கு போட்டி வைத்துள்ளார் அவர். இதையடுத்து தங்களுக்கு தோன்றிய விஷயங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சர்கார் படத்திற்கு பிறகு பிகில் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











