twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசுக்காக எதையும் செய்வார்.. காக்கி வெப்சீரிஸ் புகழ் போலீஸ் அதிகாரி மீது பாய்ந்தது வழக்கு!

    |

    பாட்னா: நெட்பிளிக்ஸில் வெளியான 'காக்கி: தி பீகார் சாப்டர்' வெப்சீரிஸ் பிரபல பீகார் போலீஸ் அதிகாரி அமித் லோதாவின் கதையை அடிப்படையாக வைத்து உருவான ஓடிடி தொடராகும்.

    அந்த வெப்சீரிஸ் வெளியாகி வெற்றியடைந்த நிலையில், அமித் லோதாவின் புகழ் உச்சிக்கு சென்றுள்ளது.

    இந்நிலையில், வெப்சீரிஸ் வெளியிடுவதில் ஏகப்பட்ட டீல் பேசி ஊழல் செய்துள்ளார் அமித் லோதா என அவர் மீது அதிரடியாக வழக்குகள் பாய்ந்துள்ளன.

    ஆடிஷனுக்கே அந்த கோலத்தில் வந்த நடிகை.. வெப்சீரிஸ் வாய்ப்புகளாக குவிய அதுதான் காரணமாம்! ஆடிஷனுக்கே அந்த கோலத்தில் வந்த நடிகை.. வெப்சீரிஸ் வாய்ப்புகளாக குவிய அதுதான் காரணமாம்!

    ஓடிடியில் நிஜ சம்பவங்கள்

    ஓடிடியில் நிஜ சம்பவங்கள்

    சினிமாவில் கூட சொல்ல முடியாத நிஜ சம்பவங்களை ஓடிடியில் வெப்சீரிஸ்களாக எடுத்து இயக்குநர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். சென்சார் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனையும் இல்லாத நிலையில், எப்படியெல்லாம் இளைஞர்களை ஈர்க்க முடியுமோ அப்படியெல்லாம் வெப்சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், பீகாரை சேர்ந்த போலீஸ் அதிகாரி அமித் லோதா பற்றிய வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

    காக்கி வெப்சீரிஸ்

    காக்கி வெப்சீரிஸ்

    சினிமாவை போலவே வெப்சீரிஸிலும் போலீஸ் அதிகாரிகள் பற்றிய ஆக்‌ஷன் வெப்சீரிஸ்களுக்குத் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையாக வரக் காரணமும் அதுதான். நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள காக்கி: தி பிஹார் சாப்டர் வெப்சீரிஸில் அமித் லோதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பெரிய கேங்ஸ்டரை ஷேக்புராவில் அவர் எப்படி பிடித்தார் என்கிற கதையில் அந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது.

    பல லட்சம் மோசடி

    பல லட்சம் மோசடி

    இந்த வெப்சீரிஸுக்காக தனது பதவியை உபயோகித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் என அமித் லோதா மீது தற்போது வழக்குகள் பாய்ந்துள்ளன. நெட்பிளிக்ஸ் உடன் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே அமித் லோதா டீல் போட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அமித் லோதாவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 48 லட்சம் ரூபாய் பண பறிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    பாய்ந்தது வழக்கு

    பாய்ந்தது வழக்கு

    பொறுப்பான பதவியில் இருக்கும் அமித் லோதா தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பாய்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுதொடர்பான விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் லோதாவிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதை நல்லா இருக்கேன்னு இரண்டாவது பார்ட் எடுத்துடப் போறாங்க என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    English summary
    Bihar Police Amit Lodha booked under corruption act over Netflix webseries Khakee. Amit Lodha story turned as a web series story in Netflix and gets hit among fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X