அஜித் தங்கம்ங்க.. விஜய் கட்சியை ஒருமையில் விமர்சித்த பைசன் வாத்தியார்.. இணையத்தில் புது பஞ்சாயத்து!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், மதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கையில் படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்துள்ள மதனின் நடிப்புக்கு ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பைசன் படத்தில் பல கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்தவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் தான். படத்தின் கதாநாயகன் தொடங்கி பெரும்பாலான கதாபாத்திரங்கள் அப்படியான கதாபாத்திரங்கள்தான். இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் வந்த சந்தன ராஜ் என்ற உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான மதன் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பொறுப்பற்ற தவெக: இந்நிலையில் இவர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்ட தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவர் பேசுகையில்," ஒரு கட்சியில் இருக்கும் ஒரு பெரிய பொறுப்பாளர் ஒருவர் கூறுகிறார், இந்த மாநாட்டை பார்ப்பதற்காக நமது ரசிகர்கள் வேலையைக் கூட விட்டுவிட்டு, லீவு போட்டுவிட்டு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். இப்படியான ஆட்கள்தான் நமக்குத் தேவை என்று சொல்கிறார். ஏன்டா.. அவன் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டால், அவனுக்கு சம்பளம் நீயா கொடுப்பாய்? உனக்கு கொஞ்ச நேரத்து வேலை, நின்னு, கூட்டம் போட்டு, ஜாலியா பேசிட்டு போயிடுவ. உன்னை இவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள் இல்லையா, அப்படியானால் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும்.
பொறுப்பான அஜித்: அஜித் சார் சொல்லுவார் இல்லையா, தம்பி உனக்கு உனது வாழ்க்கை முக்கியம். உனக்கு என்று ஒரு வாழ்க்கை உள்ளது, பெற்றோர்களும் குடும்பமும் உள்ளது. அவர்களை முதலில் கவனி. உன்னைச் சுற்றி நடக்கும் அரசியலைப் புரிந்து கொள். உனக்கு இருப்பதும் ஒரு வாழ்க்கைதான். அதை கொண்டாட்டமாக வாழு. நான்கு பேருக்கு பிரயோஜனமான வாழ்க்கையை வாழ் என்று சொல்லக்கூடிய அந்த பொறுப்பு அனைவருக்கும் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புது பஞ்சாயத்து: இதில் என்னவென்றால், நடிகர் மதன் முதலில் குறிப்பிட்டது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சி மேடை ஒன்றில் பேசியதை, அவரது பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தவெகவினர் மதனின் கருத்துக்கு அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதேநேரத்தில் அஜித் ரசிகர்கள் தொடங்கி, பலதரப்பட்டவர்களும் நடிகர் மதனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் இணையதளத்தில் இணைய வாசிகளுக்கு மத்தியில் புது பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











