twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஜகவால் டிலே ஆகிக் கொண்டிருக்கும் தெலுங்கு மெர்சல்!

    By Shankar
    |

    திரைப்படம் வெற்றி பெற புத்திசாலிதனமான விளம்பரங்கள் முக்கியம். எதிர்மறையான விமர்சனங்களை பட வெற்றிக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதால் ஐந்து நாட்களில் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலை அறுவடை செய்தது மெர்சல் படம்.

    அரசியல்வாதிகளின் அளவற்ற ஆதரவு, ஊடகங்களில் மிகப் பெரும் விவாதம் சரிந்து விழ வேண்டிய மெர்சல் படத்தின் வசூலை தாங்கிப் பிடித்தன. வசூலைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தலைகால் தெரியாமல் ஆடத் தொடங்கினர்.

    BJP delays Telugu Mersal further

    மெர்சல் படம் பற்றிய எதிர்மறையான கருத்துகள், காட்சிகளை நீக்க வேண்டும் என்ற பி.ஜே.பி யின் குரலுக்கு தயாரிப்பாளர் முரளி பொறுமையாக பதில் கூறினார். திருமதி முரளியோ மத்திய அரசுக்கே சவால் விடுவது போன்று, "யாருடைய பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மெர்சல் படக் காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட மாட்டாது," என்றார்.

    ஹீரோ 'ஜோசப்' விஜய், தான் எப்போதும் இப்படித்தான் என்பதை கையெழுத்து போடாத அறிக்கை மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நாடே மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்காத விஜய், நடிகர் கமல்ஹாசன் அவர்களை சென்று சந்தித்தார்.

    இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வந்த பாரதீய ஜனதா தெலுங்கு ரிலீசுக்கு செக் வைத்துள்ளது.

    தெலுங்கில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக வேண்டிய அதிரிந்தி (மெர்சல்) தணிக்கை ஆகாததால் அக்டோபரில் வெளியாகவில்லை.

    BJP delays Telugu Mersal further

    இந்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி பயன்படுத்திக் கொண்டது சங்பரிவார். தெலுங்குப் பதிப்புக்கான தணிக்கை சான்றிதழ் வழங்குவதை மேலும் தாமதப்படுத்தியது. அக்டோபர் 27 தெலுங்கில் மெர்சல் ரீலீஸ் என அறிவிக்கப்பட்டு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதன.

    போஸ்டர், பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது. அனைத்தையும் மௌனமாக வேடிக்கை பார்த்த சங்பரிவார் தலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை துறை அரசு எந்திரத்தை வேலை செய்ய வேண்டாம் என முடக்கிப் போட்டது.

    அக்டோபர் 26 இரவுக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையூட்டி விதிமுறைகளை காரணம் காட்டி சான்றிதழ் வழங்கவில்லை.

    படம் வந்துவிடும் என நம்பி ஆந்திராவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 400 தியேட்டர்களின் தொழிலை முடங்க வைத்துள்ளது அரசு எந்திரம்.

    ஆளுங் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினால் அரசு எந்திரம் தன் கொடூர முகத்தை எப்படி பயன்படுத்தும் என்பதற்கு தெலுங்கு ரீலீஸ் தாமதப்படுத்தப்பட்டது மிகச் சிறந்த உதாரணம்.

    -ஏகலைவன்

    English summary
    Sources say that the ruling BJP and pariwars delaying the release of Telugu Mersal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X