twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? பார்த்திபனை விடாத ப்ளூசட்டை மாறன்!

    |

    சென்னை: இரவின் நிழல் மற்றும் ஒத்த செருப்பு படம் தொடர்பாக தனக்கு எழுந்துள்ள சந்தேகங்களை ஒரு கேள்வி மலராகவே தொகுத்து ட்வீட் போட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

    உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்றால் உங்க படத்துக்கு ஏன் கின்னஸ் தரவில்லை என்கிற கேள்வி தொடங்கி இரவின் நிழல், ஒத்த செருப்பு படங்களுக்கு போலி புரமோஷன் செய்துள்ளீர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

    மேலும், உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்றும் தனக்கே உரிய பாணியில் நக்கலாக கேட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

    ஹலோ அறிவுஜீவி.. யாரு இடியட்.. பார்த்திபன் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்! ஹலோ அறிவுஜீவி.. யாரு இடியட்.. பார்த்திபன் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!

    விடாத ப்ளூ சட்டை

    விடாத ப்ளூ சட்டை

    "வணக்கம் பார்த்திபன் சார் அறிவுஜீவி, இடியட் என்று நக்கலடித்து பயனில்லை. உருப்படியான பதில் மட்டுமே இங்கு மதிக்கப்படும். ஏற்கனவே தனியாய் கேள்வி எழுப்பியும் எந்த பதிலும் பளிச்சென்று வரவில்லை சோஷியல் மீடியாவில் யாரோ எழுதியதை ஆதாரம் என்கிறீர்கள். ஆகவே இதோ முழு கேள்வி தொகுப்பு கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஈயம் பூசாமல் பதில் சொல்லுங்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ளட்டும் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் படமென இரவின் நிழல் புரோமோஷன் களில் கூறுகிறீர்கள் உலகின் முதல் என்றால் அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பாதது ஏன் அல்லது அவர்கள் செய்து விட்டார்களா?

    நான் லீனியர் பஞ்சாயத்து

    நான் லீனியர் பஞ்சாயத்து

    1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை உலகத்தினர் பலரால் படிக்கப்பட்டு வரும் சினிமா இதழில் ஃபிஷ் அண்ட் கேட் 2013 இரானியன் படம் நான் லீனியர் இல் கதை சொல்கிறது என்று தெளிவாக எழுதிய ஆதாரத்தை தந்தும் அதைப் பற்றி இதுவரை வாய் திறக்காமல் சமூக வலைத்தளத்தில் யாரோ சிலர் எழுதியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நான் லீனியர் படம் இல்லை என்று மடை மாற்றுவது ஏன்? ஃபிஷ் அண்ட் கேட் படத்தில் காட்சிகள் லீனியரில் இருந்தாலும் வாய்ஸ் ஓவரில் நான் லீனியராக கதை சொல்வதாக ஒரு ட்வீட் ஆதாரத்தை தந்தீர்கள்.

    தக்காளி சட்னியா

    தக்காளி சட்னியா

    சரி உங்கள் விருப்பத்திற்கு வருவோம் நான் லீனியர் இல் கதை சொன்னாலும் அது நான் லீனியர் படம் தானே அதில் என்ன உங்களுக்கு குழப்பம் நீங்கள் நடித்த ஒத்த செருப்பு படத்தை ஒரே ஆள் நடித்த முதல் தமிழ்ப்படம் என்று ஓயாமல் பிரமோட் செய்தீர்களே அதில் நீங்கள் மட்டுமே நடித்து பலரது குரல் ஒலித்தது அல்லவா? குரலும் நடிப்பின் ஒரு பிரிவுதான் அப்படி எனில் ஒத்த செருப்பு என்பது எப்படி ஒருவர் மட்டும் நடித்தது என்றாகும் இதைத்தான் ஃபிஷ் அண்ட் கேட் படத்திலும் செய்தார்கள். உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

    நேர்மையான பதில் என்ன?

    நேர்மையான பதில் என்ன?

    ஒத்த செருப்பு படம் வெளியான ஆண்டு 2019. ஆனால், 2015ஆம் ஆண்டு தனிநபர் நடித்து எழுதி இயக்கி தயாரித்த முதல் தமிழ் படமான கர்மா வெளியாகி விட்டது என்றும் அதுகுறித்து உங்களுக்கு நன்கு தெரியும் என்றும் அதன் இயக்குனர் அரவிந்த் கூறியுள்ளாரே அதற்கு உங்கள் நேர்மையான பதில் என்ன?

    அகடம் பற்றி தெரியாதா?

    அகடம் பற்றி தெரியாதா?

    சிங்கிள் ஷாட் படத்திற்கான கின்னஸ் விருதை 2012ஆம் ஆண்டு பெற்று 2013 தியேட்டர்களில் வெளியான படம் அதன் இயக்குனர் முகமது இசாக் ஒளிப்பதிவாளர் நவ்ஷத். சூட்டிங் ஆரம்பித்தது முதல் இன்று நீங்கள் வேர்ல்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷாட் நான்லீனியர் என தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கும் வரை அகடம் படம் பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா? இது குறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காமல் இருப்பது ஏன்?

    குட்டு வெளிப்படும்

    குட்டு வெளிப்படும்

    ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்களில் இருப்பது போல ஆஸ்கர் விருதுகள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் கர்மாவின் பணியாற்றவில்லை சிறிய பட்ஜெட்டில் புதிய அவர்கள் செய்த சாதனைகள் அவை. பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு வித்தியாசமான பரிசுகளை அளிக்கும் நீங்கள் இவர்களை அழைத்து இன்றுவரை கௌரவித்தது ஏன்? அவர்கள் வெளியே தெரிந்துவிட்டால் உமது குட்டு வெளிப்பட்டுவிடும் எனும் பதட்டமா?

    ரசிகர்களுக்கு பதில் சொல்லுங்க

    ரசிகர்களுக்கு பதில் சொல்லுங்க

    இதில் அனைத்து கேள்விகளுக்கும் ஒன்றுவிடாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பதில் தாருங்கள். முடியாவிட்டால் ஒரு கேள்விக்கு பதில் தாருங்கள். 24 மணி நேரமும் கஷ்டப்பட்டு உழைத்தேன் தமிழனுக்கு தமிழனே எதிரி, எனக்கு முன்பே எதுவும் தெரியாது என்பதை பலமுறை கூறி விட்டீர். நேரடியான பதிலை தந்தால் நன்று! அறிவுஜீவி, ஒயிட் காலர் நடிகருமான பார்த்திபன் பதிலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களைப் போல காத்திருக்கும் ப்ளூ காலர் விமர்சகன். without gun." என மிக நீண்ட கேள்வித் தொகுப்பை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

    கின்னஸ் தராதது ஏன்?

    கின்னஸ் தராதது ஏன்?

    ஒரே சிங்கிள் டேக்கில் சிங்கிள் ஷாட் படமாக இரவின் நிழல் படத்தை இயக்கி இருந்தால் மட்டுமே கின்னஸ் அதிகாரிகளின் மேற்பார்வைக்கு கீழ் படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தால், தான் அதற்கு அணுகி இருக்க முடியும் என்றும், கின்னஸ் கிடைத்திருக்கும் என்றும், இந்த படம் சிங்கிள் ஷாட் படம் என்றாலும், 23 டேக்குகள் பல நாட்கள் பல ரிஹர்சலுக்கு பிறகு உருவாக்கப்பட்ட நிலையில் தான் பார்த்திபன் கின்னஸுக்கு அணுகவில்லை என ரசிகர்கள் சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.

    English summary
    Blue Sattai Maran asks a dozen questions to Parthiban over Iravin Nizhal's wold first single shot non linear movie promotion and also he teases his previous movie Oththa Seruppu also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X