துப்பாக்கியையும் போதை பொருட்களையும் கையிலெடுத்த சினிமா.. ப்ளூ சட்டை மாறன் அடுத்த சர்ச்சை!
சென்னை : இயக்குநரும் பிரபல விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கங்களில் சர்ச்சை கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போது அவர் சர்ச்சை கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன்மூலம் ரசிகர்களின் கடுப்பையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

பெரிய படங்களின் விமர்சனம்
பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் முதல் காட்சியை பார்த்துவிட்டு இத்தகைய விமர்சகர்களின் செய்யும் விமர்சனங்களால் தங்களது படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர், டைரக்டர்கள் மட்டுமின்றி அந்த ஹீரோக்களும் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் விமர்சனங்கள்
தற்போது சமூக வலைதளங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் இத்தகைய விமர்சனங்களை தவிர்க்க முடியாது என்றாலும், படம் குறித்த ஒரு பிம்பத்தை ரசிகர்களுக்கு இத்தகைய விமர்சகர்கள் ஏற்படுத்தி விடுவதால், படம் வேஸ்ட் என்று தெரிந்தால் அந்தப் படத்தை ஏன் திரையரங்கில் செலவு செய்துக் கொண்டு போய் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் யோசிக்கத் துவங்கி விடுகின்றனர்.

பாதிக்கப்படும் வசூல்
இதனால்தான் அந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது. படத்தின் நிறை குறைகளை நாசுக்காக தெரிவிக்க வேண்டும் என்பதே படக்குழுவினர்களின் தொடர் கோரிக்கையாக காணப்படுகிறது. இத்தகைய விமர்சனங்களை செய்பவர்கள் சிறிய பட்ஜெட் படங்களை கண்டுக் கொள்வதில்லை. மாறாக தங்களது பக்கத்தை பார்க்கும் பார்வையாளர்களை அதிகரிக்க பெரிய நடிகர்களின் படங்களே இவர்களது டார்கெட்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இதனிடையே, இயக்குநராகவும் சினிமா விமர்சகருமாக காணப்படும் ப்ளூ சட்டை மாறன் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அதன் விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பல ரசிகர்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்து வருகிறார். படத்தின் குறைகளையே இவர் முதலில் வெளிப்படுத்துவார். ஆனால் இவர் இயக்கத்தில் வெளியான ஆன்டி இந்தியன் படம் மிகவும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

அடுத்தடுத்த சர்ச்சை
இந்நிலையில் தற்போது இவர் புதிய சர்ச்சை கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது எந்த சினிமா உனக்கு சிகரெட்டையும் மதுவையும் சகஜம் என்ற பழக்கப்படுத்தியதோ அதே சினிமாதான் தற்போது துப்பாக்கியையும் போதை கலாச்சாரத்தையும் கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி -போதை கலாச்சாரம்
சமீபத்திய தமிழ் சினிமாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை சமீபத்திய விக்ரம், பீஸ்ட், தர்பார், கேஜிஎப் 2, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் போஸ்டர்களை பயன்படுத்தி ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ரசிகர்களை கடுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்
இதன்மூலம் அவர் முன்னணி நாயகர்களை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார். மேலும் அவர்களது ரசிகர்களையும் கடுப்பேற்றியுள்ளார். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் அதிகமான துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் குறித்த காட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











