Vijay Campaign: சில பிணந்தின்னி கழுகுகள்.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த ப்ளூசட்டை மாறன்!
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு அவரைக் காண் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 38 போர் உயிரழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதில் 6 குழந்தைகளும் அடங்குவர். இப்படி இருக்கும்போது, பல திரைப்பிரபலங்களும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும்போது, பலரும் இந்த சம்பவத்திற்கு காரணமே விஜய் தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, அவர், “கரூர் துயர நிகழ்வு குறித்து விரைவான விசாரணை நடத்தி.. சரியான தீர்ப்பு வருமென நம்புவோம். எப்படி நடந்தது? யாரெல்லாம் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வரும் முன்பாகவே... சில பிணந்தின்னி 'கழுகுகள்' கேடுகெட்ட, ஒருதலைபட்சமான கருத்துக்களை தெரிவித்தால்.. அவற்றை செருப்பால் அடித்து துரத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு விஜய்க்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்தை மறைமுகமாக அட்டாக் செய்வது போலவும் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அப்பாவி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். அதில், " கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று பகிர்ந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் இடம் பத்திரிகையாளார்கள் திருச்சி விமான நிலையத்தில் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களைத் தவிர்த்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். விஜய்யின் இந்த செயலும் அரசியல் தளத்திலும் இணையத்திலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











