twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணிவு படமே கிடையாது... அது கிராம சபை கூட்டம்: ப்ளு சட்டை மாறன் விமர்சனம்

    |

    சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.இந்நிலையில், ப்ளு சட்டை மாறனின் துணிவு பட விமர்சனம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    துணிவு பாக்ஸ் ஆபிஸ்: இதுதான் அஜித் கேரியரில் பெஸ்ட் ஓபனிங்... வசூலில் தரமான சம்பவம்துணிவு பாக்ஸ் ஆபிஸ்: இதுதான் அஜித் கேரியரில் பெஸ்ட் ஓபனிங்... வசூலில் தரமான சம்பவம்

    ப்ளு சட்டை மாறன் விமர்சனம்

    ப்ளு சட்டை மாறன் விமர்சனம்

    அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜிஎம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளை பின்னணியில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 23 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது துணிவு. இந்நிலையில், இந்தப் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

    எங்கப்பா கதையவே காணோம்

    எங்கப்பா கதையவே காணோம்

    துணிவு ஒன்லைன் பற்றி கூறியுள்ள ப்ளு சட்டை மாறன், இந்தப் படத்தின் கதை பற்றி அஜித்திடம் ஒரு சீன் மட்டுமே சொன்னாராம் வினோத். அதனால் தான் அஜித்தும் ஓகே சொன்னதாகவும் ஆனால் இப்போது படத்தை பார்த்தால் அந்த சீனும் இல்லையென விமர்சித்துள்ளார். அதேபோல் மொத்தமாக படத்தை எடுத்துவிட்டு அதற்குள் ஒரு கோர்வையான கதையை வைத்து சமாளித்துவிட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

    கிராம சபைக் கூட்டம்

    கிராம சபைக் கூட்டம்

    மேலும் படம் முழுவதும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் சுட்டுக் கொள்வதும் நடுவில் மட்டும் பேசுவதை மட்டுமே பார்க்க முடிகிறது. அதேபோல் ஹீரோ அஜித்துக்கு வழக்கம் போல ஒரு உப்புச் சப்பில்லாத பிளாஷ்பேக் இருப்பதாகவும் கமெண்ட் அடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வில்லன்களை வங்கி வாடிக்கையாளர்கள் முன் உட்கார வைத்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவார் அஜித். அதனை சுட்டிக் காட்டியுள்ள ப்ளுசட்டை, இதெல்லாம் கிராம சபை கூட்டம் மாதிரி இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி மக்களின் குறைகளை கேட்ட அஜித், தியேட்டரில் இருக்கும் ரசிகர்களின் குறைகளை கேட்க மறந்துவிட்டார் எனவும் நக்கல் செய்துள்ளார்.

    இன்னும் மாறாத ஹீரோயிசம்

    இன்னும் மாறாத ஹீரோயிசம்

    துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் பற்றியும் ப்ளு சட்டை கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆயிரம் பேர் சுற்றி வளைத்து சுட்டும் ஹீரோ மீது ஒரு புல்லட் கூட படவில்லை. ஆனால், ஹீரோ மட்டும் திரும்பி நின்று எதிரிகளை சுட்டு வீழ்த்துகிறார். சுருக்கமா பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடுன மாதிரி இருக்குது. எந்த இலக்கும் இல்லாம ஓடும் துணிவு படத்தில் வில்லன் கேரக்டர் டம்மியாக இருப்பதாகவும், கதையின் கருவும் சிறப்பாக இல்லையென விமர்சித்துள்ளார். மேலும் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் போன்ற படங்களை இயக்கிய வினோத், இப்படி படம் இயக்கியது ஏமாற்றமே எனவும் விமர்சன செய்துள்ளார். ப்ளு சட்டை மாறனின் இந்த விமர்சனத்தை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Ajith's Thunivu was released in theaters yesterday. It is reported that the film got a good opening on the first day and has collected Rs 23 crores. In this case, Blue Sattai Maran reviews about Ajith's Thunivu film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X