Don't Miss!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
’சேரி’ன்னு சொல்லாதீங்க பார்த்திபன்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்.. செருப்பு மாலை பிரச்சனைக்கும் ட்வீட்!
சென்னை: இரவின் நிழல் படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை என கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு பார்த்திபன் ரசிகர்கள் செருப்பு மாலை அணிவித்த போட்டோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Recommended Video
மேலும், 'சேரி' என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீங்க பார்த்திபன் என பிரிகிடா பேசிய சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக பார்த்திபன் ட்வீட் போட்டு அவரும் சர்ச்சையில் சிக்கிய ட்வீட்டை எடுத்து விளாசித் தள்ளி இருக்கிறார்.
இயக்குநர் பார்த்திபன் மற்றும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு இடையே இந்த வாரம் மிகப்பெரிய ட்விட்டர் மோதல் மூண்டுள்ளது.
இது ரொம்ப ஓவர்.. ப்ளூ சட்டை மாறன் உருவபொம்மை எரிப்பு.. ரசிகர்கள் அட்ராசிட்டி!

சிங்கிள் ஷாட் பட சர்ச்சை
உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இரவின் நிழல் என இயக்குநர் பார்த்திபன் தனது படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த படம் முதல் படமில்லை. ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் முதல் நான் லீனியர் படம் என ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்தார். ஃபிஷ் அண்ட் கேட் படத்தில் எங்கேயும் அந்த படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனக் குறிப்பிடவில்லை என பார்த்திபன் பதில் அளித்திருந்தார். வெரைட்டி உள்ளிட்ட உலகின் பிரபலமான பத்திரிகைகளில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை எடுத்துப் போட்டு பார்த்திபனுடன் ட்விட்டர் சண்டையை ஆரம்பித்தார் ப்ளூ சட்டை மாறன்.

செருப்பு மாலை
இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் இரவின் நிழல் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லை என்றும் அந்த படம் ரொம்பவே சுமாரான படம் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்த நிலையில், பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், உருவ பொம்மையை எரித்தும் நிகழ்த்திய போராட்டங்கள் பெரும் பரபரப்பை கிளப்பின.

அவரே ஷேர் பண்ணிட்டாரு
"ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்புமாலை போட்டு தரமான செருப்படி சம்பவம் செய்த பார்த்திபன் ரசிகர்கள்.
புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்." என அந்த புகைப்படங்களை அவரே ஷேர் செய்து ட்வீட் போட்ட நிலையில் அதற்கும் கீழ் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். சிலர், பார்த்திபனின் சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக பார்த்திபனுக்கு எதிராகவும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாகவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கின்னஸ் ஏன் தரல
இயக்குநர் முகமது இசாக் இயக்கத்தில் உருவான அகடம் திரைப்படம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிங்கிள் ஷாட் திரைப்படம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 2012ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மொத்த படமும் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் 30 நொடிகள் என பதிவிட்டு உங்க படத்துக்கு உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இருந்தால் ஏன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

சேரின்னு சொல்லாதீங்க பார்த்திபன்
இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாகவும் ஆபாச வசனங்கள் பேசியும் நடித்துள்ள நடிகை பிரிகிடா, சேரி மக்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். நானும் மன்னிப்பு கேட்கிறேன் என பார்த்திபன், போட்ட ட்வீட்டிலும் அதே வார்த்தையை பயன்படுத்திய நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்தாதீங்க பார்த்திபன் என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டு விளாசித் தள்ளி உள்ளார்.