படம் வெளியான பிறகும்.. உன் படம் எப்போ ரிலீஸ்னு கேட்குறாங்க... வருத்தப்பட்ட புளு சட்டை மாறன்!

சென்னை: தனது ஆன்டி இந்தியன் படம் ரிலீஸ் ஆன பிறகும் கூட தன்னுடைய படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என கேட்கிறார்கள் என பிரபல திரைப்பட விமர்சகரான புளு சட்டை மாறன் வருத்தப்பட்டுள்ளார்.

Recommended Video

Anti Indian Movie Audience Opinion | Blue Sattai Maran, Anti Indian Public Review

மகிழ் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'கபளிஹரம்'.

செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

புளு சட்டை மாறன்

புளு சட்டை மாறன்

இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட விமர்சகரும் இயக்குநருமான 'புளூ சட்டை' மாறன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சினிமா குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, '' தற்போதைய சூழலில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது பெரிய விஷயமல்ல. அதனை எப்படி மக்களைச் சென்றடையும் வகையில் வெளியிடுவது என்பதுதான் கடினமான வேலை.

எப்போ ரிலீஸ்னு கேட்குறாங்க?

எப்போ ரிலீஸ்னு கேட்குறாங்க?

ஏன் சொல்கிறேன் என்றால் என்னுடைய இயக்கத்தில் 'ஆன்டி இந்தியன்' திரைப்படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. தற்போது கூட என்னுடைய நண்பர்கள் உன்னுடைய படம் எப்போது வெளியாகிறது? எனக் கேட்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக என்னுடைய திரைப்படம் இருந்தது.

கடினமான சூழல் தொடருகிறது

கடினமான சூழல் தொடருகிறது

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை மக்களைச் சென்றடைய வைப்பதில் கடினமான சூழல் இன்றும் தொடர்கிறது. இதனை எப்படி ஒழுங்குபடுத்தி வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் ஏதேனும் ஒரு முடிவு எடுத்துச் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்." என்றார்.

சர்ச்சையான விமர்சகர்

சர்ச்சையான விமர்சகர்

திரைப்பட விமர்சகரான புளு சட்டை மாறன் திரைப்படங்கள் குறித்து அதிரடியாக விமர்சனங்களை வெளியிடுபவர். சில சமயம் இவரது விமர்சனங்கள் எல்லை மீறும் வகையில் இருக்கும். இதனால் சமூக வலைதளங்களில் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாவார். சில இயக்குநர்களே அவரது விமர்சனத்தை கண்டு கடுமையாக சாடியிருக்கின்றனர்.

கடந்த 10 ஆம் தேதி ரிலீஸ்

கடந்த 10 ஆம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் புளு சட்டை மாறன் ஆன்டி இந்தியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிண அரசியலை கூறும் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் பெரும் சர்ச்சைகளுக்கும் தடைகளுக்கும் பிறகு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X