»   »  பிரபல நடிகை, நடிகரின் வீடு இடிப்பு... இடித்த செலவை செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்!

பிரபல நடிகை, நடிகரின் வீடு இடிப்பு... இடித்த செலவை செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தையும், நடிகருமான சத்ருஹன் சின்ஹாவுடன் மும்பை ஜூகு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 மாடிக்கும் மேல் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டிடம் கட்டியதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளில் பூஜை அறை தவிர மற்ற பகுதிகளை இடித்தனர்.

சத்ருஹன் சின்ஹா வீடு

சத்ருஹன் சின்ஹா வீடு

பா.ஜ.க எம்.பி-யும், முன்னாள் அமைச்சருமான சத்ருஹன் சின்ஹா தனது மகள் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் மும்பை ஜூகு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மாடிகளை கொண்ட இந்த வீடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 8 மாடிகளை கொண்ட வீடாக கட்டிமுடிக்கப்பட்டது.

அனுமதி இன்றி கட்டிடம்

அனுமதி இன்றி கட்டிடம்

இதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்றிருந்தனர். இந்த நிலையில் 8 மாடிக்கும் மேல் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டிடம் கட்டியதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அதை உறுதி செய்தனர்.

சில பகுதிகள் இடிப்பு

சில பகுதிகள் இடிப்பு

அனுமதியின்றி சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளில் பூஜை அறை தவிர மற்ற பகுதிகளை இடித்து தள்ளினர். அதோடு சத்ருஹன் சின்ஹா மீது வழக்கு பதிவு செய்தனர்.

எனக்கு பிரச்னை இல்லை

இந்நிலையில், சத்ருஹன் சின்ஹா இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். "வீடுகளுக்குள் கழிப்பறை கட்டுவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. கட்டிட வேலை செய்யும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக மாடியில் ஒரு கழிப்பறையைக் கட்டியிருந்தோம். அதை அகற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஒத்துழைப்பு கொடுத்தேன்

நிரந்தரமான பூஜை அறை கட்டுவதற்கான அனுமதிக்காகக் காத்திருப்பதால் தற்காலிகமாக ஒரு அறையை உருவாக்கி இருந்தோம். எந்தக் குழப்பத்தையும் உருவாக்காமல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்" எனக் கூறியுள்ளார் சத்ருஹன் சின்ஹா.

மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்

மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்

கட்டுமானத்தை இடித்தற்கான செலவை செலுத்துமாறு சத்ருஹன் சின்ஹாவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த வீடு இடிப்பு சம்பவம் பா.ஜ.க-வினர் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Read more about: sonakshi sinha shatrughan sinha
English summary
Actress Sonakshi Sinha lives with her father and actor Shatrukhan Sinha in thier own home in mumbai. In this case, Someone complained that, additional building builts without the permission of the 8-storey municipality was allowed. Subsequently, the corporation officials demolished parts of the house that bulit without permission.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X