ட்ரெண்டாகும் களத்தில் பாபி சிம்ஹா.. பார்வதி நாயர் ஜோடி!
Recommended Video

சென்னை : சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கத் தொடங்கினார் பாபி சிம்ஹா.
தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் பார்வதி நாயர்.

பாபி சிம்ஹா
வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்த வேகத்தில் தேசிய விருதும் கிடைத்தது. எல்லாமே குறுகிய காலத்திலேயே கிடைத்தது. அதன்பின்னர் சறுக்கல்களும் ஏற்பட்டன.

மீண்டும் வில்லன்
ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பாபி சிம்ஹா. விஜய் சேதுபதி நடித்த 'கருப்பன்' படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வில்லன்
'கம்மர சம்பவம்' என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் பாபி. இந்தநிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஜிகர்தண்டா' படத்தைப் போல அவருக்கு இந்த சீரியலில் பயங்கர வில்லன் கேரக்டராம்.

வெப் சீரியல்
'சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். பிளாக் ஹியூமர் சீரியலாக இது தயாராகிறது. பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வெப் சீரியலை தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











