»   »  இந்த பாபி சிம்ஹாவுக்கு இதே வேலையா போச்சு!

இந்த பாபி சிம்ஹாவுக்கு இதே வேலையா போச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாபி சிம்ஹா. சில தினங்களுக்கு முன் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு படம் வந்தது.

அந்தப் படத்தில் பாபி சிம்ஹாதான் பிரதான வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் தான் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை என்றார். பின்னர் அதிக சம்பளம் கேட்டு, அதை தயாரிப்பாளர் தராததால் டப்பிங் பேச வராமல் தகராறு செய்தார் பாபி என்ற உண்மை வெளியில் வந்தது.

Bobby Simha insults us, says Meera Jakkirathai producer

அடுத்து இப்போது மீரா ஜாக்கிரதை. இந்த படத்தில், பாபிசிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக அவரது படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், ‘மீரா ஜாக்கிரதை' படத்தில் நான் நடிக்கவில்லை என்று பாபிசிம்ஹா மறுப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார்.

இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி எட்வர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீரா ஜாக்கிரதை படத்தை ஜி.கேசவன் இயக்க நான் தயாரித்தேன். இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இணை இயக்குனர் சதீஷ்தான் பாபிசிம்ஹாவை அழைத்து வந்து நடிக்க வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு பாபிசிம்ஹாவுக்கும், இயக்குநருக்கும் தகராறு ஏற்பட்டது.

அவரும் இணை இயக்குநர் சதீசும் சேர்ந்து டைரக்டர் கேசவனை தகாத வார்த்தைகளால் திட்டினர். கீழே தள்ளி அடிக்கவும் முயன்றனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு திருச்செங்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது படத்துக்கான பிரச்சினைகள் முடிக்கப்பட்டு திரைக்கு கொண்டு வரும் நேரத்தில், ‘மீரா ஜாக்கிதை' படத்தில் நடிக்கவே இல்லை என்று பாபிசிம்ஹா புகார் அளித்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் இந்த படத்தில் நடித்தது படம் திட்டமிட்டபடி திரைக்கு வரும்,'' என்று கூறியுள்ளார்.

English summary
Meera Jakkirathai movie producer alleged Bobby Simha is insulting them by denying his part in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil