»   »  3 நாட்களாக ஏரியில் கிடந்து உப்பிய நிலையில் கன்னட நடிகர் அனிலின் உடல் மீட்பு

3 நாட்களாக ஏரியில் கிடந்து உப்பிய நிலையில் கன்னட நடிகர் அனிலின் உடல் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி பலியான கன்னட நடிகர் அனிலின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

துனியா விஜய் ஹீரோவாக நடித்து வரும் மஸ்தி குடி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடைபெற்றது.

Body of second actor who drowned during filmshoot at Bengaluru found

ஹெலிகாப்டரில் இருந்து விஜய், நீச்சல் தெரியாத வில்லன்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஏரியில் குதித்தனர். இதில் உதய் மற்றும் அனில் நீரில் மூழ்கி பலியாகினர்.

அவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு தேடி வந்தனர். நேற்று உதய்யின் உடல் மீட்கப்பட்டது.

இந்நிலையில் 3 நாட்கள் கழித்து இன்று அனிலின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அனில் மற்றும் உதய்யின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் பலர் படத்தின் தயாரிப்பாளர் மீது கோபம் அடைந்துள்ளனர்.

English summary
Body of another Kannada actor who got drowned in TG Halli lake near Bengaluru is found on thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil