»   »  சென்னை வெள்ள நிவாரணம்... அக்ஷய் குமார் ரூ 1 கோடி நிதி!

சென்னை வெள்ள நிவாரணம்... அக்ஷய் குமார் ரூ 1 கோடி நிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Bollywood Actor Akshay Kumar donated Rs 1 Crore for Chennai Flood Relief

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.

Bollywood Actor Akshay Kumar donated Rs 1 Crore for Chennai Flood Relief

சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். சுஹாசினி மணிரத்னத்தின் எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியுள்ளார் ப்ரியதர்ஷன்.

Bollywood Actor Akshay Kumar donated Rs 1 Crore for Chennai Flood Relief

சுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார்.

பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.

தற்போது அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்திப் பதிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After the huge disaster caused by rain in Chennai, Many Celebrities are lending their hands to the needy people. On the donators list, well known Bollywood Actor Akshay Kumar has joined now by giving Rs. 1 Crore for Chennai Flood Relief activities.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil