Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எனக்கும் அந்த நடிகைக்கும் திருமணமா? விளக்கம் கொடுத்த சித்தார்த் மல்ஹோத்ரா!
மும்பை : பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகை கியாரா அத்வானிக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
2022ம் ஆண்டு பல திரைப்பிரபலங்களுக்கு சிறப்பான ஆண்டாகவே இருந்தது எனலாம். நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் செய்து கொண்டனர்.
அதேபோல, நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டு இரட்டைக்குழந்தைக்கு பெற்றோராகிவிட்டனர். சமீபத்தில் ஹன்சிகாவும் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.
கோல்டன் க்ளோப் விருது.. ராஜமௌலி-கீரவாணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி
இந்த நட்சத்திர தம்பதிகளில் வரிசையில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது. பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலை இவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மெஹந்தி நிகழ்ச்சி
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி, ஹல்டி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக இருவரும் கடந்த வாரம் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் சித்தார்த் மல்ஹோத்ராவின் சென்று வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொய்யானது
இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சித்தார்த், தனது திருமணம் பற்றி பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது வதந்தி என்றார். இதுவரை யாரும் எனது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மக்கள் ஊகிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும், அதற்கு பதிலாக நான் நடிக்கும் படங்களை விரும்பி பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

வதந்திக்கு காரணம்
கியாரா அத்வானி சமீபத்தில், புதிய பிரைடல்வேர் விளம்பரத்திற்காக சிவப்பு பாரம்பரிய லெஹங்கா அணிந்து தலையில் சிவப்பு முக்காடு அணிந்திருந்தார் இந்த விளம்பரம் தான் இவர்களின் திருமண வதந்திக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது சித்தார்த் 'மிஷன் மஜ்னு' படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடிக்கிறார். அதேபோல, கியாரா அத்வானி கார்த்திக் ஆர்யனுடன் 'சத்யபிரேம் கி கதா' படத்தில் நடித்து வருகிறார்.