»   »  டீ குடிக்க கூட காசில்லாமல் பரிதவிக்கும் நடிகை.. - உதவுவாரா சல்மான் கான்?

டீ குடிக்க கூட காசில்லாமல் பரிதவிக்கும் நடிகை.. - உதவுவாரா சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சல்மான் கானின் வீட்டில் அத்துமீறி நுழைந்த ரசிகை!- வீடியோ

மும்பை : பாலிவுட் நடிகை பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகை பூஜா தட்வால் 'வீர்காடி', 'ஹிந்துஸ்தான்', 'சிந்தூர் கி சவுகந்த்' போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார்.

காசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வரும் தகவல் அறிந்து பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பூஜா தட்வால்

பூஜா தட்வால்

பாலிவுட் நடிகை பூஜா தட்வால் 'வீர்காடி', 'ஹிந்துஸ்தான்', 'சிந்தூர் கி சவுகந்த்' போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். 'வீர்காடி' படத்தில் சல்மான் கானுடன் நடித்த இவர் தற்போது மிகுந்த வறுமையில் தவித்து வருகிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

காசநோய் பாதிப்பு

காசநோய் பாதிப்பு

திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூஜா.

கைவிட்ட குடும்பத்தினர்

கைவிட்ட குடும்பத்தினர்

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறாராம்.

கோரிக்கை

கோரிக்கை

மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். காசநோய் பாதிப்பால் பரிதவித்து வரும் பூஜா தனக்கு நடிகர் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறாராம்.

English summary
Bollywood actress Pooja dadwal was suffering from DB, without having money for even a cup of tea. Actress Pooja Dadwal was acted with Salman Khan in 'Veergati'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X