twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா சாதாரண காய்ச்சல்… கங்கனா ரணாவத்தின் சர்ச்சை பதிவை நீக்கியது இன்ஸ்டாகிராம் !

    |

    சென்னை : பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டது.

    கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டு இருந்தார்.

    ஹைத்ராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங் நிறைவு.. நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்! ஹைத்ராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங் நிறைவு.. நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

    மேலும், கொரோனா குறித்து அவர் பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் முடக்கம்

    ட்விட்டர் முடக்கம்

    மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறைகள் குறித்து, நடிகை கங்கனா ரணாவத், வன்முறையைத் தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார் இதையடுத்து, அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

    மீண்டு வருவேன்

    மீண்டு வருவேன்

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருந்தார்.

    சாதாரண காய்ச்சல்

    சாதாரண காய்ச்சல்

    மேலும், கொரோனாவை நினைத்து பயந்தால் அது உங்களை பயமுறுத்தும், வாருங்கள் கோவிட்19 வைரசை அழிப்போம். இது ஒரு சிறிய காய்ச்சல் அதை தவிர வேறு எதுவும் இல்லை. ஊடகங்கள் மக்களை அதிகமாக பயமுறுத்தி வருகின்றன என பதிவிட்டு இருந்தார்.

    Recommended Video

    Thalaivi Reel Vs Real | J.Jayalalitha, MGR, A.L.Vijay, Thalaivi Trailer
    பதிவு நீக்கம்

    பதிவு நீக்கம்

    கொரோனா உலக நாடுகளையை அச்சுறுத்தி வருகிறது. மேலும், இந்த நோய்க்கு திட்டதட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நேரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு பலரின் மனங்களை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

    Read more about: kangana ranaut
    English summary
    Bollywood actress Kangana Ranaut's Instagram post has been deleted
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X