ரூ.60 கோடி மோசடி.. நட்சத்திர ஓட்டலை இழுத்து மூடிய ஷில்பா ஷெட்டி!
மும்பை: பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி, தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இவர் மும்பை பாந்த்ராவில் பஸ்டியன் நட்சத்திர ஓட்டலை நடத்தி நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நட்சத்திர ஓட்டலை மூட ஷில்பா ஷெட்டி மூடி உள்ளார். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீதான ரூ. 60 கோடி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பாலிவுட் நடிகையாக ஷில்பா ஷெட்டி, சில தென்னிந்திய மொழி திரைபடங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் பிரபுதேவா உடன் இணைநது மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடிகை கதாபாத்திர வாய்ப்புகள் குறைந்து வந்ததை அடுத்து 2009ஆம் ஆண்டில் தனது 34வது வயதில் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

பஸ்டியன்: ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். "இதில், 4ந் தேதி முதல், மும்பையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பஸ்டியன் பாந்த்ராவுக்கு விடைபெறும் நாளாகும். எண்ணற்ற நினைவுகளையும், மறக்க முடியாத இரவுகளையும், நகரத்தின் இரவு வாழ்க்கைக்கு வடிவம் கொடுத்த இந்த இடம், இப்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த புகழ்பெற்ற இடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, எங்கள் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு மாலை நேரத்தை ஏற்பாடு செய்கிறோம். அது பஸ்டியனின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடும் ஒரு இரவாக இருக்கும். பஸ்டியன் பாந்த்ரா நட்சத்திர ஓட்டல் விடைபெற்றாலும், எங்களின் 'ஆர்கேன் அஃபேர்' இரவு நிகழ்ச்சி அடுத்த வாரம் பஸ்டியன் அட் தி டாப்பில் தொடரும். ஒரு புதிய அத்தியாயத்தில் புதிய அனுபவங்களுடன் இந்தப் பாரம்பரியம் தொடரும்" என்று ஷில்பா ஷெட்டி அதில் குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திர ஓட்டல்: நடிகை ஷில்பா ஷெட்டி 2016ம்ஆண்டு தொடங்கப்பட்ட பஸ்டியன், மும்பையின் உணவு மற்றும் சமூக வட்டாரங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருந்தது. அதன் நேர்த்தியான வடிவமைப்பு, பிரபலங்கள் நிறைந்த நிகழ்வுகள் மற்றும் வகை வகையான உணவுகள், நவீன சரவிளக்குகள் என மொத்த ஆடம்பர வசதிகளையும் கொண்டதாக பஸ்டியன் இருந்தது.இந்த நட்சத்திர ஓட்டலில் மலாலா அரோரா, ஜான்வி கபூர், ஷாஹித் கபூர், மீரா ராஜ்புத், ரித்தேஷ், ஜெனிலியா தேஷ்முக், அனன்யா பாண்டே, திஷா பதானி, டைகர் ஷராஃப், கத்ரீனா கைஃப், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்கள் வாடிக்கையாளராக இருந்தனர்.
இரண்டு புது கிளைகள்: ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, தொழிலதிபர் தீபக் கோத்தாரியிடம் இருந்து சுமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 60.4 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2015 ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 'பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத்தான் பஸ்டியன் நட்சத்திர ஓட்டல் மூடப்படுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், பஸ்டியன் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் பிந்த்ரா, பாந்த்ரா எங்கள் தொடக்கமாக இருந்தது, பஸ்டியன் பாந்த்ரா விடைபெற்றாலும், இந்த பிராண்ட்டில் இரண்டு புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன. அதில் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று ரஞ்சித் பிந்த்ரா பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











