»   »  திடீர் உடல்நலக்குறைவால் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரபல நடிகை!

திடீர் உடல்நலக்குறைவால் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரபல நடிகை!

Written By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

வித்யா பாலன் - சித்தார்த் ராய் கபூர் தம்பதியர் தங்களது புத்தாண்டை துபாயில் கொண்டாட முடிவு செய்திருந்தனர். மேலும் ஜனவரி 1 வித்யா பாலனின் பிறந்த நாளும் சேர்ந்து வருவதால் இருவரும் பல்வேறு திட்டங்களை போட்டு வைத்திருந்தனர்.

vidyabalan

ஆனால் எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் வித்யாபாலனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து மருத்துவமனைக்கு சென்றனர்.

மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் வித்யாபாலனை, சித்தார்த் அட்மிட் செய்தார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகக் கற்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் வித்யாபாலன் அதனால் தன்னுடைய உடல்நிலையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறுகின்றனர்.தற்போது வித்யாபாலன் நன்றாக இருப்பதாக அவரது செய்தியாளர் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் தற்போது புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் வித்யாபாலன் - சித்தார்த் தம்பதி!

English summary
Bollywood actress Vidya Balan is Admitted in a hospital in Mumbai due to the Sudden Illness. Her Spokesperson said Vidya is well now and she is Discharged Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil