நேசிக்க கற்றுக்கொண்டேன்... கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி காதல் திருமணம்!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி 1992ம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

தந்தையைப் போல இவருக்கும் நடிப்பின் மீது அவர் இருந்ததால், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவான ஹீரோ படத்தின் மூலம் நேரடியாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

நடிகை அதியா ஷெட்டி

நடிகை அதியா ஷெட்டி

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Mubarakan, Nawabzaade, Motichoor Chaknachoor ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும், பல இடங்களில் ஜோடிப்புறாவாக சுற்றி வந்தனர். ஆனால், இருவரும் காதல் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தனர்.

கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டி திருமணம்

கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டி திருமணம்

இந்நிலையில், கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன், மகாராஷ்டிராவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் தடபுடலாக நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

நேசிக்க கற்றுக்கொண்டேன்

நேசிக்க கற்றுக்கொண்டேன்

திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிட்ட கே.எல்.ராகுல், உனது வெளிச்சத்தில் நேசிக்க கற்றுக்கொண்டேன். இன்று, எங்களுக்கு வீட்டில் திருமணம் நடந்தது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்தது. நன்றியுணர்வும் அன்பும் நிறைந்த இதயத்துடன், இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களுடன் தொடர்கிறோம் என்று பகிர்ந்து இருந்தார்.

விரைவில் வரவேற்பு

விரைவில் வரவேற்பு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி தனது திருமணத்தை கே.எல். ராகுல் நடத்தியுள்ளார். ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் மிகவும் எளிமையாக பண்ணை வீட்டில் நடந்து முடிந்துள்ளதால், வரவேற்பு நிகழ்ச்சியை பல பிரபலங்களை அழைத்து விமரிசையாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனகமாக ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு திருமண வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பலரும் புதுமண தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X