ஷாருக்கானின் சர்ச்சை படம் பதான்.. தொடங்கியது முன்பதிவு..டிக்கெட் விலை என்ன தெரியுமா?
மும்பை : பெரும் சர்ச்சையில் சிக்கிய பதான் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் டிக்கெட்டின் விலை ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் பதான்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

காவி உடை சர்ச்சை
பாலிவிட் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியானது.இதையடுத்து, சமீபத்தில் பதான் படத்திலிருந்து பாடலின் வீடியோ வெளியானது. ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சியான அந்த டூயட் பாடலில் தீபிகா காவி நிற பிகினியும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்திருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, தீபிகா, ஷாருக் இருவருமே காவி உடையை வேண்டுமென்றே அணிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டனர்
மேலும், இந்துக்கள் மனதை புண்படுத்திய இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதான் படத்திலிருந்து பாடலை நீக்க வேண்டும் அப்படி நீக்கவில்லை என்றால், படம் திரையிடப்படும் திரையரங்கை தீயிட்டு கொளுத்தப்படும் என பதான் படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.

முன் பதிவு தொடங்கியது
இந்நிலையில், பதான் திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதால், படத்திற்கான முன்பதிவு தொடங்கிய உள்ளது. டெல்லியில் உள்ள ஐமாக்ஸ் திரையரங்குகளில் பதான் படத்தின் டிக்கெட் விலை 2200 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் 1450 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருகிறது.

அதிகவிலையில் டிக்கெட் விற்பனை
ஆனால், சென்னையில் வழக்கம் போல, சாதாரண திரையரங்குகளில் 200 ரூபாய் வரை ஒரு டிக்கெட் விற்கப்படுகிறது என கூறப்படுகின்றது. காவி உடை சர்ச்சையில் பதான் திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கா விட்டால், தியேட்டரை தீயிட்டு கொளுத்துவோம் என தகவல் பரவிய நிலையில், டிக்கெட் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











