டாய்லெட்டில் பாம்பு.. அச்சச்சோ.. உள்ளே மாட்டிக் கொண்ட காளி வெங்கட்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

சென்னை: பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பது ஏதோ போகிற போக்கில் சொல்லக்கூடிய சொலவடை என்று எடுத்து கொண்டு விட முடியாது. பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் தான். விஷமில்லாத பாம்புகளைப் பார்த்தாலும் பயப்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் காளி வெங்கட் தான் கழிப்பறையில் ஒரு பாம்புவிடம் சிக்கிக் கொண்டதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது அவர் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள படமான பாம் படத்தில் நடித்துள்ளார். படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்ட போது நடிகர் காளி வெங்கட் மிகவும் சுவாரஸ்யமான அதே நேரத்தில் கொஞ்சம் பக் பக் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

அதாவது அவர் பேசும்போது, " ஒரு நாள் டீ குடித்தவுடன், இயற்கை உபாதை வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது எனது உதவியாளரிடம் சொல்லி அருகில் இருந்த டாய்லெட்டை பார்த்துவிட்டு வரச் சொன்னேன். அவரும் பார்த்துவிட்டு வந்து, டாய்லெட் நன்றாக உள்ளது சார். ஒரே ஒரு டைல்ஸ் மட்டும் உடைந்துள்ளது என்று கூறினார். நானும் நான் போவது இயற்கை உபாதையை கழிக்க, அப்படி இருக்கும்போது, டைல்ஸ் உடைந்து இருந்தால் என்ன, உடையாமல் இருந்தால் என்ன என நான் நினைத்துக் கொண்டு சென்றுவிட்டேன்.

Actor Kaali Venkat Faced Very Terrific Incident He Faced Snake at Toilet
Photo Credit:

பாம்பு: அங்கு சென்று பார்த்தால், அந்த கதவை என்னால் சரியாக மூட முடியவில்லை. பாதியில் யாராவது கதவைத் திறந்து விட்டால் என்ன செய்வது என யோசித்துவிட்டு, கதவை காலில் வைத்து அழுத்தினேன், உடனே மூடிக்கொண்டது. நான் டாய்லெட்டுக்குச் சென்றபோது எனது மொபைலை நான் எடுத்துச் செல்லவில்லை. இப்படி இருக்கையில், நான் கதவை உதைத்து மூடும் போது அதை மீண்டும் திறப்பதற்கு கைப்பிடி இல்லை என்பதை கவனிக்கவில்லை. இப்படி இருக்கையில் நான் வந்த வேலை முடிந்தது என்று, தண்ணீரை எடுக்கலாம் என்று பார்த்தபோது, உடைந்த டைல்ஸில் இருந்து பாம்பு எட்டிப் பார்த்துக் கொண்டு உள்ளது.

சிரிப்பு: எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது. இப்படி இருக்கையில், கதவையும் திறக்க முடியாமல், பாம்பையும் உஷ் உஷ் என உள்ளே விட்டு விட்டுக் கொண்டு இருந்தேன். இப்படி இருக்கையில் தான் கதவில் ஒரு முனையைப் பிடித்து இழுத்து கதவை திறந்து வெளியே வந்துவிட்டேன்" என்று கூறினார். அவர் இவ்வாறு கூறும் போது அருகில் இருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் சிரி சிரி என சிரித்துக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X