»   »  பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தும் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்த போனி கபூர்

பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தும் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்த போனி கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்!- வீடியோ

மும்பை: ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் போனி கபூர் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மோனா கபூரை திருமணம் செய்து அர்ஜுன், அன்சுலா என்ற 2 குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூர் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துள்ளார்.

70களில் ஸ்ரீதேவியின் படத்தை பார்த்ததுமே போனிக்கு அவரை பிடித்துவிட்டது. அவருடன் எப்படியாவது நெருங்கிப் பழக வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

ஸ்ரீதேவியை பார்க்க போனி கபூர் சென்னை வர அவரோ படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றிருந்திருக்கிறார். 1979ம் ஆண்டு சொல்வா சாவன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஸ்ரீதேவியை சந்தித்துள்ளார் போனி.

மிஸ்டர் இந்தியா

மிஸ்டர் இந்தியா

ஸ்ரீதேவியோ போனியிடம் பேசாமல் அவரின் தாயுடன் பேசுமாறு கூறியுள்ளார். மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி ஹீரோயினாக நடிக்க ரூ. 10 லட்சம் சம்பளம் வேண்டும் என்று அவரின் தாய் போனியிடம் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஸ்ரீதேவியுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்றால் அவர் தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் போனி. இதையடுத்து ஸ்ரீதேவியின் அம்மா கேட்டதைவிட கூடுதலாக ரூ.1 லட்சம் போட்டு ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்.

காதல்

காதல்

மிஸ்டர் இந்தியா படத்தில் நடிக்கும்போது தான் ஸ்ரீதேவி போனியுடன் நெருங்கிப் பழகியுள்ளார். போனி ஸ்ரீதேவியை விழுந்து விழுந்து கவனித்து இம்பிரஸ் செய்துள்ளார்.

மனைவி

மனைவி

ஸ்ரீதேவி சாந்தினி படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றபோது போனியும் சென்றுள்ளார். திரும்பி வந்த பிறகு தான் ஸ்ரீதேவியை காதலிப்பதாக மனைவி மோனாவிடம் தெரிவித்துள்ளார் போனி கபூர்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

போனி தான் என் வாழ்க்கைத் துணை என்பதை முதலில் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் அவரை பற்றி தெரிந்த பிறகு காதலிக்கத் துவங்கினேன். முதலில் ரொம்ப கடினமாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்தே அவர் என்னவர் என்பதை ஏற்க முடிந்தது. நான் அவரின் காதலை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

English summary
Boney Kapoor fell in love with actress Sridevi at the first sight but it took many years for her to accept him as the man of her dreams. Sridevi was married to Boney Kapoor for more than two decades.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil