வலிமையால் குஷியான போனி கபூர்...மீண்டும் வினோத்துடன் கூட்டணி...இந்த முறை ஹீரோ யாரு தெரியுமா ?

சென்னை : நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் இணைந்த வலிமையும் செம கலெக்ஷன் பார்த்து வருகிறது. இதனால் வினோத்தை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் போனி கபூர்.

Recommended Video

நடிகர் AjithKumar தம்பி Anil Kumar முதல் Tweet | அண்ணன் படம் பற்றி தம்பி Tweet, Valimai FDFS

முதல் படத்திலேயே வித்தியாசமான கதை, ரசிக்க வைத்த திரைக்கதை என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் ஹெச்.வினோத். இரண்டாவதாக கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்தார். இந்த படம் கொடுத்த வெற்றி வினோத்தை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

வெற்றிகளை குவிக்கும் ஹெச்.வினோத்

வெற்றிகளை குவிக்கும் ஹெச்.வினோத்

நேர்கொண்ட பார்வை படமும் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்க நினைத்த போனி கபூர் அந்த படத்திற்கும் வினோத்தையே டைரக்டராக்கினார். தொடர் வெற்றிகளை பெற்ற வினோத், அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி, மற்றொரு பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை கடந்து விட்டது.

மார்ச் 9 ல் ஏகே 61 ஷுட்டிங்

மார்ச் 9 ல் ஏகே 61 ஷுட்டிங்

வலிமை படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுத்ததால் ஏகே 61 படமும் வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் உருவாக உள்ளது. மார்ச் 9 ம் தேதி இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்க உள்ளது. ஐதராபாத்தை தொடர்ந்து, புதுச்சேரி அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஷுட்டிங்கை நடத்த உள்ளனர். வெளிநாட்டிற்கும் சென்று சில காட்சிகளை எடுக்க போகிறார்கள். இந்நிலையில் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து அசந்து போன போனி கபூர், அசத்தலான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா

வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா

ஏகே 61 படத்தை தொடர்ந்து, வினோத் இயக்கும் மற்றொரு படத்தையும் தானே தயாரிக்க போனி கபூர் முடிவு செய்து விட்டாராம். ஆனால் இந்த முறை ஹீரோ அஜித் கிடையாதாம். விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து தான் வினோத் படமெடுக்க போகிறாராம். இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாம். இது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியுடன் மற்றொரு ஹீரோவாக யோகிபாபு நடிக்க போகிறாராம்.

என்ன தான்ப்பா உங்க பிளான்

என்ன தான்ப்பா உங்க பிளான்

இந்த தகவல் வெளியானது முதல் ரசிகர்கள், என்ன தான்ப்பா உங்க பிளான் என கேட்டு வருகின்றனர். மாஸ் ஹீரோவாக இருந்த அஜித்தை நேர்கொண்ட பார்வையில் அமைதியான கேரக்டரில் நடிக்க வைத்தீர்கள். வலிமை படத்தில் அவரை ஆக்ஷன் ஹீரோ ஆக்கி விட்டு, தெலுங்கு ஹீரோ கார்த்திகேயாவை வில்லன் ஆக்கினீர்கள். ஏகே 61 ல் அஜித்தையே வில்லன் ரோலில் நடிக்க வைக்க போகிறீர்கள். இது போதாதென வில்லன் ரோல்களில் அதிகம் நடித்து வரும் விஜய் சேதுபதியையும், காமெடி ரோல்களில் நடித்து வரும் யோகிபாபுவையும் ஹீரோ ஆக்க போகிறேன் என்கிறீர்கள். எப்படிப்பா நீங்க மட்டும் இப்படி வித்தியாசமாக யோசிக்கிறீங்க என பலர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X