»   »  அனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு ஈடுகொடுக்கத் திணறும் ஐஸ்வர்யா ராய்

அனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு ஈடுகொடுக்கத் திணறும் ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ருத்ரமாதேவி படத்தின் மூலம் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்ட அனுஷ்கா சக நடிகை ஐஸ்வர்யா ராயின் ஜஸ்பா படத்தை பாக்ஸ் ஆபீஸில் முந்தியிருக்கிறார்.

கடந்த வாரம் அனுஷ்கா நடிப்பில் ருத்ரமாதேவி மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் ஜஸ்பா ஆகிய படங்கள் உலகம் முழுவதும் வெளியாகின.


2 படங்களுமே ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் இவ்விரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.


ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

அனுஷ்கா ராணியாக நடித்திருந்த ருத்ரமாதேவி திரைப்படம் கடந்த வாரம் உலகமெங்கும் வெளியானது. அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.


2 நாளில்

2 நாளில்

வெளியான முதல் 2 நாட்களில் சுமார் 20 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது அனுஷ்காவின் ருத்ரமாதேவி. தமிழ் தவிர மற்ற மொழிகளில் 2350 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல ஓபனிங்கைக் கொடுத்திருக்கிறது.


ஜஸ்பா

ஜஸ்பா

ஐஸ்வர்யா ராய் 5 வருடம் கழித்து நடிக்க வந்திருப்பதால் ஜஸ்பா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. நாடு முழுவதும் 1800 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் முதல் 2 நாட்களில் 9.72 கோடிகளை வசூலித்திருக்கிறது.


அனுஷ்கா vs ஐஸ்வர்யாராய்

அனுஷ்கா vs ஐஸ்வர்யாராய்

2 ஹீரோயின்களில் அனுஷ்கா ராணியாக நடித்த ருத்ரமாதேவி திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸின் முடிசூடா ராணியாக அனுஷ்கா திகழ்கிறார். 80 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட ருத்ரமாதேவி இன்னும் ஒருசில தினங்களில் போட்ட பணத்தை எடுத்து விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.


தமிழில்

தமிழில்

தமிழில் வருகின்ற 16ம் தேதி ருத்ரமாதேவி வெளியாகிறது தமிழிலும் படத்திற்கு அதிகமான வரவேற்பு இருப்பதால் இங்கும் அனுஷ்காவின் ராஜ்ஜியம் பாக்ஸ் ஆபீஸில் வெளிப்படும் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர். மேலும் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற 3 வது தென்னிந்திய திரைப்படம் ருத்ரமாதேவி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 2 இடங்களை பாகுபலி, எந்திரன் ஆகிய திரைப்படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.


English summary
Box Office: Anushka's Rudhramadevi beats Aishwarya's Jazbaa. Rudhramadevi 2 days Collection approximately at Rs 20+ crore, the same time Aishwarya Rai's Jazbaa has collected Rs 9.72 crore at the Indian box office in two days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil