»   »  சென்னையில்... பாகுபலியின் முதல் வார வசூலை வீழ்த்தியது விஜய்யின் புலி

சென்னையில்... பாகுபலியின் முதல் வார வசூலை வீழ்த்தியது விஜய்யின் புலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புலி திரைப்படம், ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது.

புலி படத்தை பாகுபலியுடன் பலரும் ஒப்பிட்டு வரும் நிலையில் பாகுபலி படத்தின் முதல்வார சென்னை வசூலை முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது விஜயின் புலி.


படம் வெளியாகி 4 தினங்கள் முடிவடைந்த நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 2.84 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது புலி திரைப்படம்.


புலி

புலி

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருந்தார் இயக்குநர் சிம்புதேவன். கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர்.


2.84 கோடி

2.84 கோடி

கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 2.84 கோடியை வசூலித்து இருக்கிறது என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியானது மற்றும் போட்டிப் படங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் அனைத்துத் திரையரங்களிலும் புலி படத்திற்கு 90% இருக்கைகள் நிரம்பி வழிய, புலி சென்னையில் நன்கு கல்லா கட்டி இருக்கிறது.


புலி vs பாகுபலி

புலி vs பாகுபலி

ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சென்னையில் முதல் வாரத்தில் சுமார் 1.66 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான பாகுபலி திரைப்படம் முதல் வாரத்தில் 363 காட்சிகள் திரையிடப்பட்டு இந்த சாதனையைப் புரிந்தது. அதே நேரத்தில் தமிழில் மட்டுமே வெளியான புலி 465 காட்சிகள் திரையிடப்பட்டு 2.84 கோடிகளை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து இருக்கிறது. இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிசில் பாகுபலியை வீழ்த்தி இருக்கிறது புலி.


வரும் நாட்களில்

வரும் நாட்களில்

முதல் வாரத்தில் புலி நன்றாக பாக்ஸ் ஆபிசை வேட்டியாடினாலும் வரும் நாட்களில் புலியின் ஆதிக்கம் குறைய வாய்ப்புகள் அதிகம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்கள் இல்லாதது மற்றும் பிற படங்களின் வருகை ஆகியவற்றை இதற்கு காரணங்களாக கூறுகின்றனர்.


புலி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்

புலி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்

புலி திரைப்படம் ஆன்லைனில் வெளியானது மற்றும் வரும் வாரத்தில் வெளியாகும் ருத்ரமாதேவி படம் போன்றவை புலி படத்திற்கு முன்னால் பெரும் சவால்களாகத் திகழ்கின்றன. இந்த சவால்களை முறியடித்து பாக்ஸ் ஆபிசில் வெற்றிக்கொடி நாட்டுமா புலி? பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Box Office: Vijay's Puli Beats Rajamouli's Baahubali First weekend collection in Chennai. Vijay's Puli Rs 2.84 crore Collected the Chennai box office. Rajamouli's Baahubali which had collected 1.66 Crore Only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil