Don't Miss!
- News
பழனி முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை ஒலிக்க வேண்டும்..பெ.மணியரசன் வலியுறுத்தல்
- Automobiles
இது எல்லாம் வந்தா இந்தியாவே சிங்கப்பூரா மாறிடுமே! ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
- Finance
தமிழ்நாட்டுக்கு வர துடிக்கும் உலகின் மிகப்பெரிய காலணி நிறுவனம் Pou Chen Corp..!
- Lifestyle
படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்கணுமா? அப்ப தேனை இந்த மாதிரி சாப்பிடுங்க...
- Technology
நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!
- Sports
72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
கருவிலே சிதைந்த குழந்தை.. உடைந்து போன பிரபல பாடகி.. திருமணத்திற்கு முன்னாடி இப்படியா நடக்கணும்?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் உடைந்து போய் அந்த சோகப் பதிவை வெளியிட்டுள்ளார்.
கருவிலேயே குழந்தை சிதைந்ததை அறிந்த ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.
தன் படத்திற்கு தானே ரெவ்யூ கொடுத்து ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த எஸ்கே...தீயாய் பரவும் வீடியோ

திருமணத்துக்கு தயார்
ஏற்கனவே இரு கணவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் பிரபல பின்னணி பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை விட இளம் வயது சாம் அஸ்காரி என்பவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான தேதியையும் அவர்கள் குறித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

வயிற்றில் குழந்தை
திருமணத்துக்கு முன்பாகவே சாம் அஸ்காரியின் குழந்தையை தான் வயிற்றில் சுமந்து வருவதாகவும் கடந்த மாதம் ஏப்ரல் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். அதன் காரணமாகவே இருவரும் தங்களது திருமணத்தை விரைவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

கருவிலே சிதைந்த குழந்தை
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த மேஜிக்கலான குழந்தை கருவிலேயே சிதைந்து போனதை மனமுடைந்த நிலையில் அறிவித்துள்ளார் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். அவரது அந்த போஸ்ட்டுக்கு கீழ் சாம் அஸ்காரி கவலைப்படாதே.. சீக்கிரமே எல்லாமே சரியாகி விடும், நாம் சந்தோஷமாக இன்னொரு குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்ப்போம் என ஆறுதல் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்
இந்த துயரமான செய்தியை அறிந்த ஹாலிவுட் பிரபலங்கள் முதல் பிரிட்னி ஸ்பியர்ஸின் ரசிகர்கள் என பலரும் அவருக்கு அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் ஆறுதல் கூறி வருகின்றனர். 40 வயதாகும் பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு ஏற்கனவே வயதுக்கு வந்த இரு மகன்கள் உள்ளனர். கெவின் ஃபெடர்லைன் மற்றும் ஜேஸன் ஆலன் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட இரு கணவர்களை விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் நடக்குமா
சாம் அஸ்காரியின் கருவை சுமந்த நிலையில் தான் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், இப்படியொரு சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ள நிலையில், தங்களது திருமணத்தை இருவரும் தற்காலிகமாக தள்ளி வைப்பார்கள் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.