ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த் நடிக்கிறாரா?.. லோகேஷ், நெல்சன், அட்லிக்கும் இப்படியொரு வாய்ப்பா?
சென்னை: எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் பிரம்மாண்டமாக ஜன நாயகன் படத்தை தயாரித்து வருகிறது. யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

அதிகபட்சமாக தளபதி விஜய் தனது கடைசி படத்துக்காக 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவரும் மாநாடு மேடைகளில் பேசும் போது கேரியரின் உச்சம் என்றும் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு மக்களுக்காக நலன் செய்யப் போவதாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் புரட்சிகரமாக புஸ்ஸி ஆனந்த் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ்காரரான விஜய் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து போராடி தானே முதலமைச்சராக மாறுவது தான் இந்த படத்தின் கதை என்றும் தகவல்கள் உலா வருகின்றன. விஜய்யின் முகம் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்து வரும் நிலையில், பொதுச் செயலாளரின் முகத்தையும் பிரபலப்படுத்த புஸ்ஸி ஆனந்தை ஒரு காட்சியில் நடிக்க வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். படம் வெளியானால் தான் இதன் உண்மைத்தன்மை தெரியவரும்.

அட்லி, லோகேஷ் மற்றும் நெல்சன்: விஜய்க்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட மூவரையும் வைத்து விஜய் போட்டோ எடுத்தது வைரலான நிலையில், தற்போது ஜன நாயக்ன் படத்தில் அவர்களும் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பல கோடி பிசினஸ்: கூலி படத்தைத் தொடர்ந்து பல கோடிக்கு பிசினஸ் ஆகும் அடுத்த தமிழ்ப்படமாக ஜன நாயகன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர், லியோ படங்களின் வசூல் குறித்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கூலி மற்றும் ஜன நாயகன் பாக்ஸ் ஆபீஸ் பஞ்சாய்த்தும் விரைவில் ஆரம்பித்துவிடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











