»   »  டேய் தயாரிப்பாளரே, இதுக்கு தான் சதீஷுக்கு பதில் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன்: அமுதன்

டேய் தயாரிப்பாளரே, இதுக்கு தான் சதீஷுக்கு பதில் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன்: அமுதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சதீஷ், சி.எஸ். C. S அமுதன் டிவீட்ஸ்.

சென்னை: டேய் தயாரிப்பாளரே, இதுக்கு தான் சதீஷுக்கு பதில் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன் என்று தமிழ் படம் 2.0 இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்வீட்டியுள்ளார்.

சிவா, சதீஷ் உள்ளிட்டோரை வைத்து சி.எஸ். அமுதன் இயக்கி வரும் படம் தமிழ் படம் 2.0. ஹிட்டான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான். முதல் போஸ்டரிலேயே தெறிக்க விட்டார் அமுதன்.

இந்நிலையில் அவர் சதீஷை ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளையொட்டி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை போட்டு வாழ்த்து கூறி ட்வீட்டியுள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

ஷாட்

சதீஷின் ட்வீட்டை பார்த்த இயக்குனர் சி.எஸ். அமுதனோ ஷாட் ரெடி, எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து சீக்கிரம் வாங்க. லைட்டு போயிட்டிருக்கு என்று பதில் ட்வீட் போட்டார்.

கலாய்

ப்ரோ...லைட் போகுது...தயவு செய்து சீக்கிரம் வரப் பாருங்க..ட்விட்டரை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழ் படம் 2.0-ன் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தும் ட்வீட்டியுள்ளார்.

கெட்டப்

அப்படி எல்லாம் வந்துட முடியாது சார். நிறைய கெட்டப்புகள் இருக்கு. ரெடியாயிட்டு தான் வர முடியும் என்று சதீஷ் அமுதனுக்கு பதில் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர்

உடனே வர முடியாது என்று சதீஷ் ட்வீட்டியதை பார்த்த அமுதன் தயாரிப்பாளரை டேக் செய்து டேய் இதுக்குத்தான் ஆர்.ஜே. பாலாஜியை போடலான்னு சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Thamizh Padam 2.0 director C. S. Amudhan tweeted mentioning the movie producer complaining about comedian Sathish who is busy wishing actress Aishwarya Rajesh on her birthday. Amudhan just made fun of Sathish who is a part of his movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X