»   »  பிக்பாஸ் ஓவியாவை மீண்டும் பார்க்கலாமா..? - காயத்ரி ட்வீட்டால் குஷியான ஓவியா ஆர்மி!

பிக்பாஸ் ஓவியாவை மீண்டும் பார்க்கலாமா..? - காயத்ரி ட்வீட்டால் குஷியான ஓவியா ஆர்மி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே முதல் சீசன் முடிந்து ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அடுத்த இடங்களை சினேகன், ஹரிஷ் ஆகியோர் பெற்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்குமே என்பது பாதி நாட்கள் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதுபற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை.

போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாகிவிட்டனர். அடிக்கடி அவர்கள் பார்ட்டி, ஹோட்டல்களில் கூடி கொண்டாடி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாவதை காணமுடிகிறது.

காயத்ரி ட்வீட்

காயத்ரி ட்வீட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் புதில் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

பிக்பாஸ் பிரபலங்களை சந்திக்கலாம்

என்னுடன் மற்ற பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸையும் நீங்கள் சந்திக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்த திறப்பு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை ஓவியாவும் கலந்துகொள்வதாக தகவல் வந்தால் ஓவியா ஆர்மியினருக்கு கொண்டாட்டம்தான்.

ஓவியா வருவாங்களா இல்லையா

ஓவியா வருவாங்களா? இல்லையா ? எங்களுக்கு அதை மட்டும் சொல்லுங்க, உங்களை எல்லாம் பாக்க வர முடியாது..!

ஓவியா மட்டுமே

நீங்க வேண்டாம், ஓவியாவை மட்டும் வர சொல்லுங்க... என்றும் எங்கள் இதயத்தில் குடியிருப்பவள் ஓவியா மட்டுமே!

English summary
Gayathri Raghuram is the subject of many criticisms of Biggboss. Oviya fans are keen on the information posted bu gayathri raghuram on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X