Vijayakanth HBD: கேப்டனின் சொல்லப்படாத மறுபக்கம்.. விஜயகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் ஸ்டோரி!

சென்னை: தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்தவர் தான் நடிகர் விஜயகாந்த். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரை வளர்த்து விட்ட விஜயகாந்த், அரசியலிலும் தனது அழுத்தமான கால் தடத்தை பதித்திருந்தார். இன்றைய அரசியல் தலைவரான விஜய்யை வளர்த்து விட்ட பெருமை அவரையே சாரும். விஜயகாந்தின் 73வது பிறந்த நாளை அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார்கள். கேப்டன் எப்போது பிறந்தார், எந்த படத்தில் நடித்தார் என்பதெல்லாம் அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் தெரியும். அவரின் தெரியாத மறுபக்கத்தை விஜயகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷயாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

மதுரையில் ரைஸ் மில்லை கவனித்து வந்த விஜயகாந்த், ரஜினி, கமல் என பல நடிகர்கள் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் சினிமாவிற்கு வந்து மிகப்பெரிய சாதனைகளை செய்து இருக்கிறார். வாய்ப்பு தேடி பல கம்பெனிகளில் ஏறி இறங்கிய விஜயகாந்திற்கு ரஜினி படம் ஒன்றில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவருக்கு அப்போது 100 ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டது. ஆனால், படம் ஆரம்பிக்கும் போதே அந்த கதாபாத்திரத்தில் விஜயகாந்தை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகரை நடித்து வைத்திருக்கிறார்கள்.

Vijayakanth Captain Birthday
Photo Credit:

கேப்டன் விஜயகாந்த்: அதோடு மட்டுமல்லாமல் உன்னுடைய நிறத்திற்கும் வில்லன் ரோல் தான் சரியாக இருக்கும், உன்னால் ஹீரோவாக வரமுடியாது என விமர்சனமும் செய்து இருக்கிறார்கள். ஆனால், விஜயகாந்தின் நண்பர், உன்னால் சாதிக்க முடியும் என அவருக்கு உத்வேகத்தை கொடுக்க அதே வெறியுடன் சினிமாவில் போராடி சினிமாவில் தனது கால் தடத்தை பதித்து, தூரத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் விஜயகாந்த். இவரா ஹீரோ... இவருடன் நடிக்க முடியாது என்று சொன்ன ஹீரோயின்கள் எல்லாம் இவரது கால் சீட்டுக்காக காத்திருந்தார்கள்.

Vijayakanth Captain Birthday
Photo Credit:

நடிகர் சங்க கடனை அடைத்தார்: ஒரு காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த விஜயகாந்த் தன் கடுமையான முயற்சியால் உயர்ந்து உச்ச நடிகராக பரிமாணம் எடுத்து, நடிகர் சங்கத்தின் தலைவராகிய ஒட்டுமொத்த கடனையும் அடைத்தார். தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த கலைஞர்களையும் ஒரு இடத்தில் திரட்டி கலை நிகழ்ச்சி நடத்தி, நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராக பிறகு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஒரு முறை சாரல் என்கிற கலை நிகழ்ச்சியை ஏராளமான திரையுலக பிரபலங்களை திரட்டி நடித்திவிட்டு. இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து பிரபலங்கள் அனைவரும் ரயிலில் ஏறினார்கள்.

ரயிலை நிறுத்தினார்: சினிமா பிரபலங்களுக்காகவே சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு ரயில் அவர்களுக்கு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், யாருக்கும் சாப்பிடவில்லை, சாப்பாடு வரவில்லை என்கிற தகவல் விஜயகாந்த் காதுக்கு வர, உடனே கொடை ரோடு அருகே ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அருகில் இருந்த பரோட்டா கடைக்கு சென்று அனைவருக்கும் பரோட்டா வாங்கி நடிகர், நடிகைகளுக்கு கொடுத்து அவர்களை வயிறார சாப்பிட வைத்து பின்னர் தான் ரயிலை எடுக்க சொல்லி இருக்கிறார். தன்னிடம் யாரும் பசி என வந்துவிட்டால் அவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்ப்பது கேப்டனின் ஸ்டைல். அவர் மண்ணை விட்டு மறைந்த இருந்தாலும், இவரின் பண்புகளால், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X