twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய நெடுஞ்சாலையில் பறந்த சொகுசு கார்கள்..ரேஸில் ஈடுபட்டார்களா, பிருத்விராஜூம், துல்கர் சல்மானும்?

    By
    |

    கொச்சி: பிரபல நடிகர்கள் பிருத்விராஜூம் துல்கர் சல்மானும் கார் ரேஸில் ஈடுபட்டார்களா என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரபல மலையாள நடிகர், பிருத்விராஜ். இவர் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் சூப்பர் ஹிட்டானது.

    இவர், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    நக்மா vs கங்கனா.. பாலிவுட்டிலும் தொடங்கிய லேடீஸ் ஃபைட்.. சிக்கித் தவிக்கும் பல பிரபலங்கள்?நக்மா vs கங்கனா.. பாலிவுட்டிலும் தொடங்கிய லேடீஸ் ஃபைட்.. சிக்கித் தவிக்கும் பல பிரபலங்கள்?

    ஓகே கண்மணி

    ஓகே கண்மணி

    இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இவரைப் போல பிரபல மற்றொரு மலையாள ஹீரோ துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், தமிழில், வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இருவரும் பிரபல நடிகர்களின் வாரிசுகள்.

    விதவிதமான கார்கள்

    விதவிதமான கார்கள்

    அதோடு சொகுசு கார் பிரியர்களும். விதவிதமான கார்களை ஓட்டுவதை இவர்கள் விரும்புவர்கள். இருவரிடமும் சில வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், கேரள மாநிலம் கோட்டயம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசுகள் கார்கள் வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தன. அதில் ஒன்று நடிகர் பிருத்விராஜூக்குச் சொந்தமான போர்ச்சே கார்.

    லம்போகினி கார்

    லம்போகினி கார்

    மற்றொன்று நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான லம்போகினி வகை கார். இந்த இரண்டு கார்களும் சாலையில் மின்னல் வேகத்தில் பறந்தன. அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அந்த கார்களை விரட்டிச் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக கேரளாவில் வைரலாகி வருகிறது. ஆனால், எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்கிற விவரம் அதில் இல்லை.

    நடவடிக்கை எடுக்கப்படும்

    நடவடிக்கை எடுக்கப்படும்

    இதையடுத்து விதியை மீறி, வேகமாக இந்த கார்கள் சென்றதா என்பது பற்றி விசாரணை நடந்த மாநில மோட்டார் வாகன துறை உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் உள்ள கேமரா மூலம் சோதனை நடத்தி இதைக் கண்டுபிடிக்க உள்ளனர். விசாரணையில் உண்மை என்று தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து இரண்டு நடிகர்களும் இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    English summary
    The Motor Vehicles Department has declared a probe into the viral video of an alleged car race between actors Prtihviraj and Dulquer Salman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X